Favourite International மற்றும் Austrade Sri Lanka ஆகியன கூட்டிணைந்து, EDENVALE என்ற நாமத்தில் மதுsaram அகற்றப்பட்ட வைன் வகைகளை அறிமுகப்படுத்thiyullana மதுsaram அகற்றப்பட்ட வைன் வகைக்கான சர்வதேச சந்தை துரிதமாக வளர்ச்சி கண்டு வருவதுடன், ஆரோக்கியமான, மது அகற்றப்பட்ட பான வகைத் தெரிவுகளுக்கான கேள்வி நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வருகின்றமையே இதற்கான காரணம். ஒரு முன்னணி அவுஸ்திரேலிய வர்த்தகநாமமான EDENVALE சுவை அல்லது தரத்தில் எவ்விதமான மாற்றங்களுமின்றி மதுsaram அகற்றப்பட்ட உயர் ரக வைன் வகையை வழங்கி வருகின்றது. Favourite International மற்றும் Austrade ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டாண்மை, மூலோபாய விநியோக வளர்ச்சி மற்றும் நுகர்வோரை இது தொடர்பில் அறியச் செய்யும் முயற்சிகள் மூலமாக, இப்பிரிவில் முன்னணி ஸ்தானத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மது அகற்றப்பட்ட வைன் வகை குறித்து Alcobev and FMCG, Favourite International ஆகியவற்றின் பணிப்பாளர்/தலைமை அதிகாரியான ராஜன் துஷியந்தன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “மது அகற்றப்பட்ட வைன் வகையானது வழக்கமான வைன் நடைமுறையுடன் ஆரம்பிப்பதுடன், தொடர்ந்து அதிலுள்ள மதுக்கலவையை அகற்றுகின்ற நடைமுறை மிகக் கவனமாக முன்னெடுக்கப்படுகின்றது. முதற்படியாக, தரமான வைனை தெரிவு செய்து, வைனில் அடங்கியுள்ள பிரதான சுவைவடிவங்கள் மற்றும் சுவையை எவ்விதமான மாற்றமுமின்றி பேணியவாறு அதிலுள்ள மதுக்கலவையைப் பிரித்து அகற்றும் வடிகட்டல் நடைமுறை இடம்பெறுகின்றது. இதன் போது வைனின் பழரச, புத்தம்புதிய மற்றும் மென்தன்மை அவ்வாறே காணப்படும். நடைமுறையின் தொடக்கத்திலிருந்தே மதுவை உள்ளடக்காத மதுக்கலவையற்ற வைன் வகையைப் போலன்றி, மது அகற்றப்படுகின்ற வைன் வகையானது பாரம்பரியமான வைன் வகையின் செழுமையான சுவை வடிவங்கள் மற்றும் வாசனைகளை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்கின்றது. reverse osmosis போன்ற தொழில்நுட்பத்தை பிரயோகித்து மது அகற்றப்படுவதுடன், உயர் அமுக்க முறையில் வைனின் அத்தியாவசிய மூலக்கூறுகளிலிருந்து மதுவும், நீரும் வேறாகப் பிரிக்கப்படுகின்றன. அதன் பின்னர் நீரிலிருந்து மது வடிகட்டப்பட்டு, மது அகற்றப்பட்ட நீரானது வைனின் ஏனைய பாகங்களுடன் மீளிணைக்கப்படுவதால், இது 0.5% க்கும் குறைவான மதுச்செறிவு கொண்ட தயாரிப்பாக எமக்கு கிடைக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய வாணிப மற்றும் முதலீட்டு ஆணைக்குழுவின் (Australian Trade and Investment Commission - Austrade) வாணிப மற்றும் முதலீட்டு ஆiணையாளரும், தூதுவருமான (வர்த்தகம்) ஜோன்-சௌத்வெல் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “அவுஸ்திரேலிய தயாரிப்பான மது அகற்றப்பட்ட வைன் வகை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதைக் கண்டு நாம் பெருமை கொள்கின்றோம். பாரம்பரிய வைன்கள் தருகின்ற அதே சுவையை, மது அகற்றப்பட்ட வடிவத்தில் சுவைத்து மகிழ்வதை இலங்கையிலுள்ள நுகர்வோர் நிச்சயமாக வரவேற்பர் என உறுதியாக நம்புகின்றோம். மது அகற்றப்ப்பட்ட பான வகைகளை தயாரிக்கும் புத்தாக்கத்தில் அவுஸ்திரேலிய வணிக நிறுவனங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. இலங்கைக்கான அவுஸ்திரேலிய ஏற்றுமதிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலிய உயர் ரக பான வகைகள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை அவுஸ்திரேலிய வாணிப மற்றும் முதலீட்டு ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.
மது அகற்றப்பட்ட வைன் வகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக Edenvale பான வகை காணப்படுவதுடன், Chardonnay, Sauvignon Blanc, Shiraz, மற்றும் Cabernet Sauvignon உள்ளிட்ட விரிவான தயாரிப்பு வரிசையை வழங்கி வருகின்றது. காப்புரிமை பெற்ற spinning cone தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தனது மதுவகைகளின் அதே சிறப்புத் தன்மையை பேணுகின்றவாறு வைன் வகையை உற்பத்தி செய்யும் தனது தொழில்நுட்பங்களுக்கு Edenvale மீள்வரைவிலக்கணம் வகுத்து வருகின்றது.
Favourite Group தலைவர் குமார் மிரச்சண்டாணி அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “மதுக்கலவையற்ற பான வகைகளுக்கான கேள்வி உலகளாவில் அதிகரித்து வருவதுடன், இப்பிரிவானது 2023 முதல் 2027 வரை 7% என்ற கூட்டு வருடாந்த வீதத்தில் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரோக்கியம் மற்றும் நலனை நோக்கிய உலகளாவிய மாற்றம், புதிய சமூக நிகழ்வுகள், சமூகப் பொறுப்புணர்வு மீதான கவனம் ஆகியனவே இவ்வளர்ச்சிக்கான உந்துசக்தியாக காணப்படுகின்றன. விருந்தோம்பல் மற்றும் சில்லறை வியாபாரத் துறைகளைப் பொறுத்தவரையில் மதுக்கலவையற்ற பான வகைகள் பான வகை பட்டியலில் ஒரு பிரதான பானமாக மாறி வருகின்றன. இலங்கையில் இப்பிரிவுக்கு மகத்தான வளர்ச்சிவாய்ப்புக்கள் உள்ளதாக Favourite International எண்ணுகின்றது. நாட்டிற்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், உள்நாட்டில் மக்கள் தமது ஆரோக்கியம் தொடர்பில் தொடர்ச்சியாக அதிகளவில் அக்கறை கொண்டுள்ளமையாலும் EDENVALE மது அகற்றப்பட்ட வைன் வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு இதுவே மிகவும் சரியான தருணமாகும்,” என்று குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உயர் ரக பான வகைகளை இறக்குமதி செய்வதில் செழிப்பான வரலாற்றை Favourite International கொண்டுள்ளது. Austrade இன் அனுசரணையுடன், Edenvale உடனான இப்புதிய கூட்டாண்மை இலங்கை நுகர்வோர் மத்தியில் பரிமாண வளர்ச்சி கண்டு வருகின்ற தெரிவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில், புத்தாக்கமான தயாரிப்புக்களை அறிமுகம் செய்வதில் Favourite International இன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மகத்தான சுவை கொண்ட Edenvale மது அகற்றப்பட்ட வைன் வகையை சுவைத்து மகிழ்வதற்கு உங்களுக்கு அருகாமையிலுள்ள Park Street Gourmet அல்லது Park Street Wines விற்பனை மையத்திற்கு வருகை தாருங்கள் அல்லது www.parkstreetgourmet.com என்ற இணையத்தளத்தினூடாக ஆராய்ந்து, அனுபவியுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM