பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய வாழ்வியல் பரிகாரம்..!

29 Jun, 2024 | 04:35 PM
image

இன்றைய சூழலில் உலகம் முழுவதும் தாராள மயமாக்கப்பட்ட பொருளாதார நிலை காரணமாக ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் பண வரவு என்பது அவசியம். 

பணத்தை சம்பாதிப்பதும், சம்பாதித்த பணத்தை மென்மேலும் வளர செய்வதும் தான் இன்றைய சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால். மாதம் முழுவதும் கடுமையாக உழைத்து கிடைக்கும் ஊதியம் அடுத்த மாதம் முழுவதுமான வாழ்வாதாரத்திற்கும் , குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைக்கும் சரியாக இருக்கும். 

இதில் சேமிப்பு என்பதோ பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதோ நடவாத செயல். ஆனால் எம்மில் பலரும் நாளாந்தம் பணவரவு உறுதி என்றால் அதில் ஒரு சிறு தொகையை சேமிக்க தொடங்குவார்கள். 

இந்நிலையில் நாளாந்தம் பணத்தை வரவழைப்பதற்கு எம்முடைய முன்னோர்கள் சில பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். அதனை உறுதியாக பின்பற்றி பண வரவை உறுதிப்படுத்திக் கொண்டு அதனை சேமித்து வளமோடு வாழ்வோம். 

இந்தக் குறிப்புகளை ஜாதகம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் ஜாதக குறிப்பு இல்லாதவர்களும், ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் பின்பற்றலாம். இந்த எளிய வாழ்வியல் பரிகாரத்தை கடைப்பிடிக்கும் போது நாளாந்தம் பணவரவு ஏற்படுவதை அனுபவத்தில் காண்பீர்கள்.

முதலில் பணம் வரும் என்ற நம்பிக்கையை மனதளவில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் உடுத்தும் ஆடைகளிலும் , பாவிக்கும் உடைகளிலும் பச்சை வண்ணம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பச்சை வண்ணம் சிறிய அளவிலாவது இடம்பெற வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து ஆறு எனும் எண்ணிக்கையிலான வெண் மொச்சை பயிரை தண்ணீரில் ஊற வைத்து, சுக்கிர ஓரை நேரத்தில் அதனை சாப்பிட்டு வாருங்கள். அதே வெள்ளிக்கிழமைகளில் இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன் ஆறு எனும் எண்ணிக்கையிலான டைமண்ட் கல்கண்டு எனும் இனிப்பை சாப்பிடுங்கள்

வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் ஊறவைத்த வெள்ளை மொச்சை பயிரை சாப்பிடுவதில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால்.. வெண் பொங்கலை சாப்பிடலாம்.‌ வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அடிவானத்தில் பளிச்சென மின்னும் விடிவெள்ளியை தொடர்ச்சியாக தரிசித்து வந்தாலும் பணவரவு உறுதி.

நீங்கள் பணியாற்றும் இடங்களிலும், உங்களுடைய பைகளிலும்.. நட்சத்திர குறியீட்டை எப்போதும் உடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நட்சத்திர வடிவிலான கீ செயினையும் பாவிக்கலாம்.

மேலே சொன்ன எளிய பரிகாரங்களை நம்பிக்கையுடனும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்த தொடங்கினால், உங்களுக்கு அறிமுகமான நபர்கள் மூலமாகவும், அறிமுகமற்ற தெரிந்த நபர்கள் மூலமாகவும் பண வரவு கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19
news-image

கடனுக்கு தீர்வு காண்பதற்கான சூட்சமம்..?

2025-01-31 17:12:14