லண்டன் கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் ஆலய கண்டாமணி நிறுவப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம்! - வைத்தீஸ்வர குருக்கள் 

29 Jun, 2024 | 01:10 PM
image

லண்டனில் உள்ள கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் கண்டாமணி நிறுவப்பட்டு, மிக விரைவில் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக கூறும் அகில இலங்கை இந்து கலாசார பேரவை தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள், தனது ஆசியுரையில் குறிப்பிடுவதாவது :

எமது சைவ சமயத்தில் ஆலய வழிபாட்டில் மணியினுடைய வகிபாகம் சிறப்பானது. பூஜை ஆரம்பமாகும்போது, கைமணியில் நால்வேதங்கள், தேவர்கள் பூஜை செய்யப்பெற்று ஏனைய கிரியைகள் ஆரம்பமாகும். அது போலவே ஆலய கண்டாமணியின் வகிபாகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

கண்டாமணியானது தெய்விக தன்மையை மிளிரச் செய்வதாகவும், ஒரு வகையில் ஆலய சூழலில் இருப்பவர்களின் இறை உணர்வினை தூண்டி, பேணுவதாகவும் நேரக்கணிப்பீட்டினை தருவதாகவும் பல்வேறு வகையான வகிபாகத்தினை ஆலய கண்டாமணி வகிக்கிறது. 

இப்பூவுலகை விட்டு சிவனோடு இரண்டற கலந்திருக்கும் எமது பெரும் மதிப்புக்குரிய இராஐஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் முதல் முறையாக 1989ஆம் ஆண்டு லண்டன் வந்து கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு லண்டனில் காண்டாமணி ஒன்றினை செய்ய வேண்டும் என்று தெரிவித்து திருப்பணியை ஆரம்பித்துவைத்தார். 

பல வித காரணங்களால் 35 ஆண்டுகளுக்கு பின்னர் குருக்கள் ஐயாவுடைய கடந்த ஆண்டு மறைவுக்குப் பின்னர், இந்த 2024ஆம் ஆண்டில் நேற்றைய தினம் (28) திருப்பணி நிறைவேறியது.

இந்த கண்டாமணி 43 இஞ்ச் விட்டம், 34 இஞ்ச் உயரம், 750 கிலோ நிறையுடையது. 

இந்த அழகான மணி நற்பதாயிரம் பிரித்தானிய பவுண்கள் (£ 40,000) மற்றும் 160 இலட்சம் ரூபாய் இலங்கை பண செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

மிக விரைவில் கண்டாமணி கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருளும் குருவருளும் ஒருசேர கிடைத்துள்ளது. 

மிகக் குறுகிய 6 மாத காலத்தில் உலகளாவிய ரீதியில் நன்கொடை வழங்கி இத்திருப்பணியை நிறைவு செய்த அன்பர்களுக்கு நகுலேஸ்வர பெருமானின் பூரண திருவருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம். 

இந்த திருப்பணியை ஆரம்பித்து மிகவும் குறுகிய காலத்தில் நிறைவு செய்த பிரித்தானியா கீரிமலை சிவன் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினரை பாராட்டி மகிழ்கின்றோம்.

கடந்த வியாழக்கிழமை 27.06.2024 அன்று மணியின் அனைத்து வேலைகளும் நிறைவுபெற்று, லண்டனில் மணி வார்க்கப்பட்ட தொழிலகத்தில் திருக்கைங்கரியம் புரிந்த சைவப் பெரியோர்கள், தொழிலகத்தின் பொறுப்பாளர் உட்பட பெருமளவினர் சூழ, கயிலைக்குருமணி நாகநாதசிவம் சிவாச்சாரியார் தலைமையில் விசேட பூஜை பிரார்த்தனை நடைபெற்றது. 

விரைவில் இந்த கண்டாமணி ஆலய சூழலில் நிறுவப்பட்டு, கோபுர கும்பாபிஷேகம் நடைபெற திருவருளும் குருவருளும் ஒருசேர பிரார்த்திப்போம். அனைவர் வாழ்விலும் இன்பம் உண்டாகட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18