தயிரிலிருந்து எடுக்கப்பட்ட புரதங்களென நாட்டுக்கு அனுப்பப்பட்ட 18 கோடி ரூபா பெறுதிமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

Published By: Digital Desk 3

29 Jun, 2024 | 12:49 PM
image

சரக்கு விமான சேவைகள் மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட 18 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்கள் வெள்ளிக்கிழமை (28) கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருட்கள் தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரதங்களின் பவுடர் என கூறி அனுப்பப்பட்டுள்ளது.

சீதுவையில் உள்ள  வெளிநாடுகளுக்கு பொதிகள் அனுப்பும் சேவை நிறுவனம் ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருட்கள் சுங்க திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில், 2 கிலோகிராம் 30 கிராம் கொக்கைன் மற்றும் 2 கிலோகிராம் 177 கிராம் கஞ்சா வகை குஷ் போதைப்பொருட்கள் இருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர்  சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 185,640,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கடவத்தை மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு முகவரிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடையாளம் தெரியாத சடலம் கண்டுப்பிடிப்பு!

2026-05-17 13:58:51
news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04
news-image

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள்...

2026-05-17 12:30:15
news-image

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில்...

2026-05-17 12:29:33
news-image

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-05-17 12:15:25
news-image

எலி காய்ச்சல் மற்றும் இரத்தப் புற்றுநோய்...

2026-05-17 11:54:31
news-image

மட்டு. கல்லடி பால வாவியில் ஆண்...

2026-05-17 11:29:04
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான...

2026-05-17 11:11:26
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2026-05-17 11:07:47