ஒவ்வொருவரும் அவர்களுடைய தாயாரை ஆயுள் முழுவதும் அக்கறையுடன் அரவணைக்க வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதனை புறக்கணித்தால் அல்லது சூழல் காரணமாக தவிர்த்தால் அவர்களுக்கு மாத்ரு தோஷம் ஏற்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு விடும். எம்மில் பலரும் பித்ரு தோஷம் குறித்து அறிந்திருப்பார்கள். அதற்காக பரிகாரத்தையும் செய்து கொண்டிருப்பார்கள். சிலர் செய்திருப்பார்கள். ஆனால் மாத்ரு தோஷம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள்.
மாத்ரு தோஷம் என்பது எம்மை ஈன்ற தாயார் மனதால் பாதிக்கப்பட்டு, சபிப்பதாகும். உடனே எம்மில் சிலர் பெற்ற தாயார் எப்படி சபிப்பார்கள்? என எதிர் வினா எழுப்புவார்கள். ஆனால் எம்மை ஈன்ற தாயாரை நாம் அவர்களின் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாக பேணி பாதுகாக்காவிட்டால் அல்லது அவர்களுக்கு மனக் குறையை ஏற்படுத்தினால் அவர்களால் தாங்க இயலாமல் சாபத்தை வழங்குவார்கள்.
இதுதான் மாத்ரு தோஷம் ஆகும். அதே தருணத்தில் எம்மை பெற்ற தாயார் சாபம் வழங்கவில்லை என்றாலும் தாயாரின் ஸ்தானத்தில் இருக்கும் பெண்மணிகளுக்கு நீங்கள் ஏதேனும் பாதக செயலை நிகழ்த்தினாலும் அவர்களும் வயிறு எரிந்து சாபமிடுவர். அதுவும் மாத்ரு தோஷம் ஆகும். மேலும் எம்முடைய வீடுகளில் உள்ள பெண்மணிகள் விவரிக்க இயலாத அல்லது சொல்ல விரும்பாத வலிகளுடன் இருந்தாலும் இத்தகைய தோஷம் உண்டாகும். சில பெண்மணிகளும், சிலரின் தாயார்களும் இறப்பதற்கு முன் தங்களது வலியை தாங்க இயலாமல் சாபமிடுவார்கள். அதற்கு காரணமானவர்கள் மாத்ரு தோஷத்தால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளாந்தம் குறைந்தபட்ச ஊதியத்தை பெறுவதற்கும் மற்றவர்களை விட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களின் அருமையை குறித்து தெரிந்து கொள்ளாதிருப்பார்கள். சொத்து இருந்தாலும் அதனை விற்கும் போது பல சங்கடங்கள் விவரிக்க இயலாத இடையூறுகள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகள் இருந்தாலே அல்லது ஏற்பட்டாலே நீங்கள் மாத்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து நீங்கள் வீட்டிற்கு திரும்பினால் உங்கள் வீட்டில் உங்களால் நிம்மதியாக இருக்க இயலாது. குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான உறவு நிலை நீடிக்காமல் கோபமான மனநிலையே நீடிக்கும். வளர்ப்பு பிராணிகள் திடீரென்று அகாலமாக மரணமடையும். மாத்ரு தோஷம் வலிமையாக இருந்தால் நெருங்கிய உறவுகளுடன் அன்பை கூட பகிர்ந்து கொள்ள இயலாத நிலை உருவாகும்.
மேலும் உங்களுடைய லக்னத்திற்கு நான்காமிடத்தில் ராகு அல்லது கேது + சந்திரன் இருந்தாலோ நான்காம் இட அதிபதி ராகு- கேதுக்களுடன் இணைந்து இருந்தாலோ நான்காம் இடத்தில் பாதகாதிபதி இருந்தாலோ நான்காம் இடத்துடன் மாந்தியின் தொடர்பு இருந்தாலோ மாத்ரு தோஷம் ஏற்படும். கடகம், சிம்மம், மகரம், கும்பம் ஆகிய நான்கு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே மாத்ரு தோஷத்துடன் பிறக்கிறார்கள். ஏனெனில் இந்த நான்கு லக்னத்திற்கும் நான்காம் இட அதிபதியும், பாதகாதிபதியும் ஒரே கிரகமாக இடம் பெறுவதால் இவர்களுக்கு சூட்சுமமாகவே மாத்ரு தோஷம் உண்டாகிறது.
இவ்வளவு வலிமைமிக்க மாத்திர தோஷத்தின் வீரியத்தை குறைக்க வேண்டும் என்றால். அன்னதானத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்னதானத்தை வழங்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அன்னதானத்தை வழங்கும் அளவிற்கு பொருளாதார சக்தி இல்லாதவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் தங்களாலான உதவிகளை வழங்கியும் , மருத்துவ சேவை வழங்குவதில் தங்களாலான உதவிகளை வழங்கியும் இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தொகுப்பு :சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM