எம்மில் சிலர் வயது வித்தியாசமின்றி நடை பயிற்சி மேற்கொள்ளும்போது அதில் ஏதேனும் அசௌகரியம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ அல்லது நினைவுத்திறன் குறைவது போன்று உணர்ந்தாலோ உங்களது மூளை பகுதியில் இயல்பாக இருக்கும் பிரத்யேக திரவத்தின் அளவு கூடுதலாகி, அதனூடாக மூளை பகுதிக்குள் அழுத்தம் அதிகம் ஏற்படுவதால் உண்டாகும் பாதிப்பு என்பதை உணர்ந்து, அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று பிரத்யேக வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஹைட்ரோகெபாலஸ் என்பது மூளை பகுதிக்குள் உள்ள வென்ட்ரிக்கிள்ஸ் எனப்படும் பிரத்யேக குழிகளில் பிரத்யேக திரவம் இயல்பான அளவை விட கூடுதலாக சேகரமாகி, அதன் காரணமாக அழுத்தம் அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்பாகும். இந்த பாதிப்பு எந்த வயதிலும் பாலின பாகுபாடு இன்றி ஏற்படக்கூடும். பொதுவாக பிறந்த பச்சிளம் குழந்தைகளிடத்திலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களிடத்திலும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம்.
பிறந்த பச்சிளம் குழந்தையின் தலை இயல்பான அளவை விட விரிவாகவும், விரைவாகவும் அதிகரித்தல், தலையின் ஒரு பகுதியில் வீக்கம் ஏற்படுதல், குமட்டல், வாந்தி, அதீத தூக்கம், எரிச்சல், உணவு மறுப்பு, வலிப்பு, கண்கள் அசையாதிருத்தல், வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானித்து உடனடியாக வைத்தியரை சந்திக்க வேண்டும்.
உங்களுடைய மூளை பகுதியில் இயல்பான அளவிற்கு சுரக்கப்பட வேண்டிய செரிபரல் ஸ்பைனல் திரவம் அதிகமாக சுரப்பதும், அது அப்பகுதியில் உள்ள திசுக்களால் உட்கிரகிக்கப்படாமல் இருப்பதாலும், இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு பாரம்பரிய மரபணு மாற்றத்தின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மூளையின் செயல்பாட்டுத் திறனை சீராக இயங்க வைக்கும் இந்த செரிபிரல் ஸ்பைனல் திரவம் இயல்பான அளவில் சுரக்க வேண்டும். இவற்றில் சமசீரற்றத் தன்மை ஏற்பட்டால் அதன் காரணமாக மூளை பகுதியில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, இத்தகைய பாதிப்பை உண்டாக்கும். சிலருக்கு மூளை பகுதியில் திடீரென்று ஏற்படும் காயத்தின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகக் கூடும்.
இவர்களை மருத்துவர்கள் நன்கு பரிசோதித்து அதனைத் தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், எம் ஆர் ஐ, சிடி ஸ்கேன், நரம்பியல் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். பரிசோதனைகளின் முடிவுகளை பொறுத்து சிகிச்சைகளை தீர்மானிப்பர். முதல் கட்ட நிவாரணமாக நவீன மருத்துவ தொழில்நுட்பங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகளை வழங்குவர். இதனைத் தொடர்ந்து ஷண்ட் ( Shunt) எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். மேலும் சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வைத்தியர் வேணி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM