அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தைப் பற்றிய புதிய போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' எனும் திரைப்படத்தில் அஜித் குமார், ஸ்ரீ லீலா, நஸ்லென், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் முன்னணி தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இதுவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படக்குழுவினர் செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதில் 'காட் பிளெஸ் மாமே' என்ற வாசகத்துடன் அஜித் குமாரின் தோற்றமும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதனையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதனிடையே நடிகர் அஜித்குமார் தற்போது 'விடா முயற்சி' எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கு பற்றி வருகிறார் என்பதும், இப்படத்தின் படப்பிடிப்பு ஓகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்தவுடன் தொடர்ச்சியாக 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM