வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்!

01 Jul, 2024 | 04:51 PM
image

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார். 

சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலும் பிரதமர்  தினேஷ் குணவர்த்தனவின் பங்கேற்புடனும் நேற்று  கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

   

இதற்கமைய ஜூலை 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மாலை 5.00 மணிவரை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அன்றையதினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் பிரதிச் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். 

ஜூலை 3ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டாவது நாளாகவும் விவாதத்தை நடத்த இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 5.00 மணிக்கு தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

இந்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவும் (OCC) கடந்த 2024.06.26ஆம் திகதி கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை, இலங்கை அரசாங்கம் மற்றும் சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) ஆகியவற்றுக்கிடையில் 2024.06.26 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இறுதி உடன்படிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனுமதியை, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05