லங்கா பிறீமியர் லீக் போட்டிகளை விறுவிறுப்படையச் செய்ய 'பவர் ப்ளாஸ்ட் ஓவர்ஸ்' என்ற புதிய வியூகம் அறிமுகம்

Published By: Digital Desk 7

28 Jun, 2024 | 04:25 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும் வகையில் புதிய வியூகம் ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ள லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 'பவர் ப்ளாஸ்ட் ஓவர்ஸ்' என்ற வியூகம் அறிமுகமாகிறது.

போட்டியில் உத்வேகத்தை அதிகரிக்கச் செய்து இரசிகர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தும் நோக்கில் 16ஆவது, 17ஆவது ஓவர்களில் 'பவர் ப்ளாஸ்ட் ஓவர்ஸ்' எனும் விசேட பவர் ப்ளே அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த இரண்டு ஒவர்கள் வீசப்படும்போது 30 யார் வட்டத்துக்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே களத்தடுப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

ரி20 கிரிக்கெட் போட்டிகளில் வழமையாக பின்பற்றப்படும் முதல் 6 ஓவர் பவர் ப்ளேக்கு புறம்பாக இந்த விசேட பவர் ப்ளே அறிமுகப்படுத்தப்படுவதாக லங்கா பிறீமியர் லீக் 2024இன் போட்டி பணிப்பாளர் சமன்த தொடங்வெல கூறினார்.

போட்டியில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் அதேவேளை இரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் நோக்கில் இந்தப் புதிய வியூகத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக்கில் முதல் 5 போட்டிகள் கண்டி பல்லேகலையிலும், அடுத்த 9 போட்டிகள் தம்புளையிலும் இறுதிச் சுற்று உட்பட 10 போட்டிகள் கொழும்பிலும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜூலை 21ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் ஜூலை 22ஆம் திகதி இருப்பு (ரிசேர்வ் டே) நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு...

2026-06-08 22:05:31
news-image

மே. தீவுகள் பயிற்சியக அணிக்கு எதிரான...

2026-06-08 20:26:35
news-image

அறிமுக வீரர் சுதார் அபார பந்துவீச்சு;...

2026-06-08 20:08:37
news-image

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் ஆடவர்...

2026-06-08 15:12:04
news-image

லண்டன் வோட்டர்லூ பாலத்தில் மகளிர் ரி20...

2026-06-08 13:38:36
news-image

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி...

2026-06-06 21:29:49
news-image

மேற்கிந்திய மண்ணில் 23 வருடங்களின் பின்னர் ...

2026-06-06 21:28:16
news-image

நியூ சண்டிகாரில் நடைபெறும் அங்குரார்ப்பண டெஸ்டில்...

2026-06-06 21:23:17
news-image

தே.வி.விழா நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில்...

2026-06-06 17:29:28
news-image

முன்னாள் தேசிய வீரர் மற்றும் பயிற்றுநர்...

2026-06-05 20:29:40
news-image

இளம் புயல் சூரியவன்ஷி அடங்கிய இந்திய...

2026-06-05 17:37:00
news-image

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார...

2026-06-05 17:37:00