(நெவில் அன்தனி)
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 விக்கெட்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.
இந்த வெற்றியை அடுத்து 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.
சமரி அத்தபத்து, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இலங்கை ஓரளவு நல்ல நிலையை அடை ந்தது.
சமரி அத்தபத்து 38 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட கவிஷா டில்ஹாரி (26), அமா காஞ்சனா (19 ஆ.இ.), நிலக்ஷிகா சில்வா (12) ஆகிய மூவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் அஃபி ப்ளெச்சர், ஆலியா அலின் ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஸ்டெஃபானி டெய்லர் 33 ஓட்டங்களையும் அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் 49 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ஹெய்லி மெத்யூஸ், ஷேர்மெய்ன் கெம்பல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ஷேர்மெய்ன் கெம்பெல் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் காவ்யா காவிந்தி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இது இவ்வாறிருக்க, மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக 39 பிடிகளை எடுத்து அதிக பிடிகளை எடுத்தவர் என்ற சமரி அத்தபத்துவின் முந்தைய சாதனையை நிலக்ஷிகா சில்வா இன்று முறியடித்தார்.
அவர் இன்றைய போட்டியில் 40ஆவது பிடியை எடுத்து சமரியின் சாதனையைக் கடந்து சென்றார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டியில் இலங்கை 4 விக்கெட்களாலும் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தன.
அதற்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 3 - 0 என முழுமையாக வெற்றி பெற்றிருந்தது.
விருதுகள்:
ஆட்டநாயகி: ஷேர்மெய்ன் கெம்ப்பெல்
தொடர்நாயகி: ஹெய்லி மெத்யூஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM