31 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது

28 Jun, 2024 | 03:35 PM
image

31 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (28) வெள்ளிக்கிழமை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் இன்றையதினம் அதிகாலை 04.35 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பெண் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 100 கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவர் அதிகாலை 05.00 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 58 கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி 31 இலட்சம் ரூபா என விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி நீர் கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52