(நெவில் அன்தனி)
சிங்கப்பூர், கல்லாங் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றிய மலையகத்தைச் சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார், துரைசாமி விஜிந்த் ஆகிய இருவரும் பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளனர்.
13 நாடுகள் பங்குபற்றிய இப் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் சங்கம் சார்பாகவே அவர்கள் இருவரும் பங்குபற்றினர். இலங்கையிலிருந்து 46 பேர் கலந்துகொண்டதுடன் அவர்கள் இருவர் மாத்திரமே மலையகத்தைச் செர்ந்த நம் இனத்தைச் சார்ந்வர்களாவர்.
இராகலை சென். லேனார்ட் தோட்டத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் தேசிய மற்றும் சர்வதேச பதக்க வீரர் மனோகரனின் சகோதரருமான சசிகுமார் 3 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கதையும் வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான 1500 மீற்றர், 800 மீற்றர், 80 மீற்றர் தடைதாண்டி ஓட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கங்ளை சுவீகரித்த சசிகுமார், ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் அங்கம் வகித்தார்.
இதேவேளை விஜிந்த், 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியிலும் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த விஜிந்த், நீளம் பாய்தல், உயரம் பாய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தார்.
சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டிகளில் பெரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பங்குபற்றியே பதக்கங்களை வென்றெடுத்ததாக நாடு திரும்பியதும் விஜிந்த், சசிகுமார் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.
'சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல வாரங்களாக கவலையுடன் இருந்ததோம். ஏனேனில் சிங்கப்பூருக்கான விமான டிக்கெட், சிங்கப்பூரில் தங்குமிட வசதிகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு எங்களுக்கு கணிசமான பணம் தேவைப்பட்டது. வேறுவழியின்றி நெருங்கிய நண்பர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் நாங்கள் எங்களது தேவையைக் கூறி கையேந்தி நின்றோம். நாங்கள் அண்டியவர்கள் அனைவரும் மனமுவந்து தங்களாலான நிதி உதவியை வழங்கி எங்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சிங்கப்பூரில் நாங்கள் பதக்கங்களை வென்றதும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தோம். ஏனேனில் இந்த வெற்றிகள் அனைத்தும் எங்களுக்கு உரியதல்ல. எங்களுக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தவர்ககளுக்கே எங்களது வெற்றியின் பெருமை சேரும். அவர்களுக்கு நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேமாம்' என வஜிந்த், சசிகுமார் ஆகிய இருவரும் வீரகேசரி 'e பத்திரிகை'க்கு தெரிவித்தனர்.
இன்னும் சில மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டியிலும் பங்குபற்றவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள் இருவரும் அங்கும் பதக்கங்கள் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM