குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த தொடர் பரிசோதனை அவசியமா..?

Published By: Digital Desk 7

28 Jun, 2024 | 02:20 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய தெற்காசிய நாடுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு மடங்கு வேகத்தில் உயர்ந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது. எம்மில் பலரும் சர்க்கரை நோய் தாக்கம் குறித்த அனுபவத்தை தொடக்க நிலை அறிகுறிகளின் மூலம் அல்லது வேறு அறிகுறிகளின் மூலம் உணர்ந்திருந்தாலும் அந்த தருணத்தில் வைத்தியர்கள் பரிந்துரைத்த படி குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையை மேற்கொண்டிருப்பர்.

ஆனால் தொடர் பரிசோதனையை தவிர்த்திருப்பர். இந்நிலையில் ஒருமுறை சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்பட்டால் அதற்காக  வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் தொடர்ந்து அதற்கான பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.‌ தொடர் பரிசோதனை செய்து ரத்த சர்க்கரையின் அளவை துல்லியமாக அவதானிக்காவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சிகிச்சையின் மூலம் முழுமையாக மீட்டெடுக்க இயலாது என்றும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எம்மில் சிலர் நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் அது தொடர்பாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றாலும் ஓரளவு நிவாரணம் பெற்றவுடன், சர்க்கரை நோய் குறித்து மக்களிடத்தில் பரவியிருக்கும் நம்பிக்கை ( ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியது இருக்கும்) காரணமாக  சிகிச்சையை நிறுத்தி விடுவர். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையும் சீரான இடைவெளியில் செய்து கொள்வதில்லை. 

இவர்களுக்கு ஐந்தாண்டுகள் கழித்தோ அல்லது பத்து ஆண்டுகள் கழித்தோ‌  கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயின் காரணமாக கால், பாதம், கால் விரல்கள், இதயம், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி சேதத்தை விளைவிக்கும். அந்தத் தருணத்தில் வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் பாதிப்பை முழுமையாக சீரமைக்க இயலாது என்ற நிலையை எடுத்துக் கூறுவதுடன் ஏன் தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வில்லை? என வினா எழுப்புவர். 

சர்க்கரை நோயாளிகள்  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையை குளுக்கோ மீற்றர், காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் -உணவு உட்கொள்வதற்கு பின், ஹெச்பிஏ1சி போன்ற பரிசோதனைகளை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்த காலகட்டத்தில் அவசியமாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சர்க்கரை நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் பாதிப்புகளை உண்டாக்க கூடும்.  அத்தகைய பாதிப்புகளை மீண்டும் சிகிச்சைகளால் முழுமையாக மீட்டெடுக்க இயலாது.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் வைத்தியர்கள் பரிந்துரைத்த காலகட்டத்தில் ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்ளாவிட்டால் அவர்களது சிறுநீரகத்தில் உப்பின் அளவு அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும். வேறு சிலருக்கு ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்பை உண்டாக்கும். வேறு சிலருக்கு சிறிய அளவிலான ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி கண் பார்வை, பாத எரிச்சல், பாத வலி போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இந்த நோயின் தன்மையையும் வீரியத்தையும் உணர்ந்து முழுமையான விழிப்புணர்வுடன் இது தொடர்பான பரிசோதனையையும், சிகிச்சையையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வைத்தியர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14