எம்முடைய இல்லங்களில் பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் கல்வி கற்று, சொந்த காலில் நின்று, வருவாய் ஈட்டி, வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டவுடன் அவர்களுக்கு திருமணம் குறித்த கனவு ஏற்படும். பெற்றோர்களுக்கும் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருமண வயதை எட்டும் முன்னரே திருமணம் எந்தவித தடையும் இல்லாமல் பொருத்தமான வரன் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யத் தொடங்குவர். அந்தத் தருணத்தில் உறவினர்களும், நண்பர்களும் திருமண செய்து கொள்ளவிருக்கும் பெண்ணிடம் ':இந்த ஆலயத்திற்கு செல்..! இந்த விரதத்தை பின்பற்று..! '' என பல ஆலோசனைகளை முன்மொழிவர். இளம் பெண்களும் அவர்களின் அனுபவ அறிவை மதித்து ஆலோசனைகளை நிறைவேற்றுவர்.
ஆனாலும் சிலருக்கு திருமணம் என்பது தாமதமாகி கொண்டே இருக்கும். வேறு சில இளம்பெண்கள் பெற்றோர் நிச்சயித்த திருமணத்தில் விருப்பமில்லாமல் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு இருப்பர். ஆனால் அங்கும் திருமணம் என்று பேச்சைத் தொடங்கினால் காதலர்களுக்குள் விரிசல் ஏற்படும். இதனால் மீண்டும் அம்மாதிரியான பெண்கள் பெற்றோர்களிடம் அடைக்கலமாகிறார்கள். இந்த நிலையில் இது போன்ற திருமண தடையை அகற்றுவதற்காக எம்முடைய முன்னோர்கள் ஏராளமான குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள். அவற்றில் நெல்லிக்காயை மாலையாக தொடுத்து இறைவனை வணங்கும் பரிகாரமும் ஒன்று.
இதற்கு தேவையான பொருட்கள் 21 & 51 ஆகிய எண்ணிக்கையிலான முழு நெல்லிக்காய். ஊசி, நூல்,21 அல்லது 51 என்ற எண்ணிக்கையிலான முழு நெல்லிக்காயினை சந்தையில் வாங்கிக் கொண்டு, அதனை ஊசி நூல் மூலம் மாலையாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த நெல்லிக்காய் மாலையை உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமி தாயாருக்கு அணிவித்து, திருமண தடையை அகற்றி பொருத்தமான மனதிற்கு இதமான வரன் அமைய வேண்டும் என மனமுருக பிரார்த்திக்க வேண்டும்.
இந்த நெல்லிக்காய் மாலை பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் தொடங்குகிறீர்களோ..! அதே கிழமையில் ஒன்பது வாரங்கள் வரை தொடர்ச்சியாக நெல்லிக்காய் மாலை பரிகாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒன்பதாவது வாரத்தின் நிறைவு தினத்தன்று மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பச்சை வண்ண புடவையை சாற்றி, விருப்பமான நிவேதனத்தை படைத்து, 'திருமண தடையை அகற்றி நல் இல்வாழ்க்கையை அமைத்துக் கொடு' என மனம் உருக பிரார்த்திக்க வேண்டும். உங்களது பிரார்த்தனை வெகுவிரைவில் நிறைவேறுவதை அனுபவத்தில் காண்பீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM