வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி இரண்டு தொலைபேசிகள் திருடப்பட்டதாக வவுனியா பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இது தொடர்பில் கைது செய்துள்ளனர்.  

வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொறுப்பு அதிகாரி ஜெய ஸ்ரீ பெனார்ண்டோ,  பொலிஸ் பரிசோதகர் இரத்தின திலக்க  மற்றும் பம்பரதேனியா, ஜேசுதாஸ், ஜயதிலக்க, கருணாதிலக்க, ஜீவானந்தம், வீரசேன, சமந்த ஆகிய பொலிஸ் குழுவே குறித்த விசாரணையினை மேற்கொண்டு சந்தேக நபரான இளம் பெண்ணை கைது செய்துள்ளது. 

குறித்த பெண்ணை இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.