நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியைகளில் வியாழக்கிழமை (27) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, யாழ்.மாவட்டத்தில் இருந்து கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிககளும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த கடற்படை மாலுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து, படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை வீரர் உயிரிழந்தார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு வீரரான குருநாகல் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ரத்நாயக்க என்பவரே உயிரிழந்திருந்தார்.
சம்பவத்தினை அடுத்து , படகில் இருந்த 10 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புதன்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM