கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி 60 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புலனாய்வு துறையினரின் விசாரணை கோரியும், அதிமுக சார்பில் வியாழக்கிழமை (27) சென்னையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தியவர்களில் புதன்கிழமை (26) நான்கு பேர் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக எடப்பாடி கே பழனிச்சாமி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
''கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையாக விவாதம் நடத்த பலமுறை சட்டமன்றத்தில் முயன்றும் விடியா திமுக முதல்வர் தயங்குவது ஏன்? கள்ள சாராய மரணங்கள் 60 ஐ தாண்டி உள்ள நிலையில் இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதுடன் இதற்கு பொறுப்பேற்று தமிழகம் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்'' என குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே சென்னையில் உண்ணா நிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் அதிமுகவினருக்கு, இந்திய குடியரசு கட்சியின் தலைவரான செ. கு. தமிழரசன் நேரில் வருகை தந்து தங்களது கட்சியின் ஆதரவை தெரிவித்தார் என்பதும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்தும் நேரில் வருகை தந்து தங்களது கட்சியின் ஆதரவை தெரிவித்தார் என்பதும், நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான், அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த உண்ணா நிலை அறப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM