வண. கரகொட உயங்கோட மைத்ரி மூர்த்தி தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார் ஜனாதிபதி

Published By: Vishnu

28 Jun, 2024 | 01:50 AM
image

பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவெனாவுக்கு வியாழக்கிழமை (27) விஜயம் செய்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ அமரபுர மகாசங்க சபைத் தலைவரும் ஸ்ரீலங்கா அமரபுர பீட ராஸ்ஸகல தரப்பு மகாநாயக்க தேரர் வண. கரகொட உயங்கோட மைத்ரி மூர்த்தி தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

இலங்கை அடைந்துள்ள பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பில் மகாநாயக்க தேரருக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவரோடு சிறிது நேரம் கலந்தாலோசித்தார். 

ஸ்ரீ தம்மானந்த பிரிவெனாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவுக்கான காசோலையையும் ஜனாதிபதி இதன்போது கையளித்தார்.

 இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

"இன்று, தேரவாத பௌத்தத்துக்கு உலகம் முழுவதும் அதிக கேள்வி உள்ளது. அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு தேரவாத பௌத்தம் தொடர்பான ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, உள்நாடு வெளிநாடுகளில் இருந்து தேரவாத பௌத்தத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் வந்து இந்த மையத்தில் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பௌத்த மத போதனைகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதனால் மகாயான பௌத்தத்தை மேலும் கற்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. அத்தகைய பௌத்த கல்வி நிலையம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்.

மேலும் தேரர்களின் ஒழுக்கம் குறித்து எழுந்துள்ள பிரச்சனைகளை அந்தந்த பீடத்தினரே தீர்க்க வேண்டும். பீடங்களின் சபைக்கு அதற்கான அதிகாரம் உள்ளது. ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிக்குகளின் ஒழுக்கம் தொடர்பில்கூட சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்மானங்களை எடுக்க முடியும். கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலை பாதிரியார்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. 

இந் நாட்களில் ஆசிரியர் சங்கங்களின் நடவடிக்கைகளால் ஆசிரியர் பணியின் மரியாதை கேள்விக்குரியாகிறது. கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை தகர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது. எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை. அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்.

இந்நிகழ்வில், அமைச்சர் மனுஷ நாணயக்கார, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டவாதி நவீன் திசாநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57