(க.கமலநாதன்)

2018 ஆம் ஆண்டில் வரவிருக்கும் வெசாக் பண்டிகை தினத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இதற்கு முன்னர் ஒரு தடவை நான் வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்பத்தில் ஆட்சியை மாற்றி காட்டுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்திருந்தார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. 

அவரின் கூற்றுக்கள் எவ்வாறானதாக இருப்பினும் 2018 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களை கண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.