கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கை இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து முதலாவது இலங்கை மூலோபாய வர்த்தக மன்றத்தினை புதன்கிழமை (26) ஆரம்பித்துவைத்தது.
வர்த்தகப் பாதுகாப்பின் முக்கியமான அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகவும் மற்றும் உலகளாவிய வர்த்தக மையங்களுக்கான போட்டி நடைமுறைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காகவும் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல்வேறுபட்ட தரப்பினர்களையும் இந்நிகழ்வு ஒன்று சேர்த்தது.
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ரி.ரி. உபுல்மலி பிரேமதிலகவின் வரவேற்புரையினைத் தொடர்ந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகக் கட்டுப்பாட்டாளர்கள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை கப்பல்களுக்கிடையே மாற்றி ஏற்றுதல் மற்றும் அவற்றின் வர்த்தகத்தினை மேற்பார்வை செய்வது தொடர்பான தமது நாடுகளின் தேசிய மூலோபாயங்களை காட்சிப்படுத்தினர்.
வர்த்தக பயன்பாடு மற்றும் இராணுவ பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மென்பொருள் விருத்தி, விமானப் போக்குவரத்து, மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புத்தாக்கங்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ‘இரட்டை பயன்பாடுடைய’ பொருட்கள் அல்லது தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் அடங்குகின்றன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங்,
“சுமூகமான முறையில் வர்த்தகத்தை மேற்கொள்ளல் மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை அடைவது சவாலான விடயமாகும்.
நாடுகள் பொருளாதார வளர்ச்சியை பேணி வளர்ப்பது மட்டுமன்றி, உலக சந்தையில் போட்டியிடுவதற்கான தமது போட்டித்திறனையும் விருத்தி செய்யக்கூடிய வகையில் சட்டபூர்வமான வர்த்தக செயற்பாடுகளுக்கு அனுகூலமானதும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றதுமான வர்த்தக சூழல்களை வளர்ப்பதற்கு அமெரிக்கா தனது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது” எனக் குறிப்பிட்டு வலுவான வர்த்தகத்துக்கு அவசியமான சமநிலையை வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் வர்த்தக மேன்மைக்கான மத்திய நிலையம் மற்றும் அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்களது கருத்துக்களும் மற்றும் CRDF குளோபல், மெக்லாரன்ஸ் மெரிடைம் அகடமி, வங்கியாளர்களின் வர்த்தக நிதிச் சங்கம் மற்றும் Hub Operators Association ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இலங்கை நிபுணர்களது கருத்துக்களும் இம்மன்றத்தில் பகிரப்பட்டது.
தொடர்ந்து மாற்றமடையும் ஓர் ஒழுங்காக்கல் பரப்பின் சிக்கல்களை திறம்பட கையாள்வதற்கான வலுவான இணங்கியொழுகும் நடைமுறைகளை நிறுவுவதற்கு தேவையான மதிப்புமிக்க குறிப்புகளையும் உத்திகளையும் இவ்வல்லுநர்கள் வழங்கினர்.
Ceylon Association of Shipping Agents, Gloir.K, Joint Apparel Association Forum மற்றும் Shippers’ Academy ஆகியவற்றின் இணை அனுசரணையுடன், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு (EXBS) நிகழ்ச்சித் திட்டத்தின் நிதி உதவியுடன், வர்த்தக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டினை இம்மன்றம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சட்டக் கட்டமைப்புகள், அனுமதிப் பத்திரங்களை வழங்குதல், சுங்க அமுலாக்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட மூலோபாய வர்த்தக முகாமைத்துவத்தை பலப்படுத்துவதற்காக EXBS நிகழ்ச்சித் திட்டமானது, உலகளாவிய ரீதியில் அரச மற்றும் தொழிற்றுறைப் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
இலங்கையில் பயிற்சி, தொழில்நுட்ப உதவி, உபகரணங்களை வழங்குதல் மற்றும் சர்வதேச பரிமாற்றங்களை மேற்கொள்ளல் போன்றவற்றிற்கு உதவி செய்வதற்காக ஆண்டுதோறும் 500,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையினை EXBS செலவிடுகிறது.
இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் திறன் விருத்திப் பணிகளைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு https://lk.usembassy.gov/ மற்றும் https://www.usaid.gov/sri-lanka ஆகிய இணையப் பக்கங்களைப் பார்வையிடுவதுடன் சமூக ஊடகங்களில் @USEmbassySLஇனைப் பின்தொடரவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM