வீரர்களை தெரிவு செய்ய சோதிடரை நம்பியிருந்தார் : பயிற்றுநர் மீது இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் குற்றச்சாட்டு

27 Jun, 2024 | 05:22 PM
image

(ஆர்.சேதுராமன்)

இந்திய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுநராக பதவி வகித்த இகோர் ஸ்டிமாக், அணியின் வீரர்களை தெரிவு செய்வதற்கு சோதிடரின் உதவியை நாடினார் என அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

குரோஷிய தேசிய அணியின் முன்னாள் வீரரான இகோர் ஸ்டிமாக் 2019ஆம் ஆண்டு இந்திய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

2026 உலகக் கிண்ணத்துக்கான 2ஆவது சுற்று தகுதிகாண் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விகளையடுத்து, பயிற்றுநர் பதவியிலிருந்து இகோர் ஸ்டிமாக் கடந்த வாரம் நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய இகோர் ஸ்டிமாக், இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

அகில இந்திய கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் தனக்கு பொய்களே கூறப்பட்டதாகவும், தனிப்பட்ட நலன்களில் அக்கறை கொண்டவர்கள் தன்னைச் சுற்றியிருந்தர் எனவும் அவர் கூறினார்.

'பயிற்றுநராக பதவி வகித்த காலத்தில்  நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவர்கள் என் பணியை செய்ய விடவில்லை.

கடந்த நான்கு வருடங்களாக நான் என்னென்ன அனுபவித்தேன் என எனக்கு மட்டுமே தெரியும். இவர்களால் என் மன நிம்மதியும் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டது. நான் விரைவில் அணியை விட்டு வெளியேறிவிடுவேன் என்பது எனது அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களுக்கு தெரியும்,  எனவே இவர்கள் என்னை வெளியேற்றாவிட்டால் நானாகவே வெளியேறிவிடுவேன்.

இவர்களால் நான் இதய சத்திரசிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். மேலும் இவர்கள் சம்பளத்தையும் ஒழுங்காக வழங்க வில்லை. என் சம்பள பாக்கியை இன்னும் பத்து நாட்களுக்குள் வழங்க வேண்டும்' என இகோர் ஸ்டிமாக் கூறினார்.

இந்நிலையில், இகோர் ஸ்டிமாக்கின் குற்றச்சாட்டுகளுக்கு அகிய இந்திய கால்பந்தாட்டச் சம்மேளனம் திங்கட்கிழமை (24) பதிலளித்துள்ளது.

இந்திய கால்பந்தாட்டச் சம்மேளனத்தை இழிவுபடுத்துவதே ஸ்டிமாக்கின் கருத்துகளின் ஒரே நோக்கம் எனத் தென்படுவதாக அறிக்கையொன்றில் அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அவரின் இந்நடத்தையானது, அவரின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில்  சரியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற  சம்மேளனத்தின் நம்பிக்கையையே வலுப்படுத்துகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதேவேளை, அதேவேளை, 'அவர் பயிற்றுநராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு தவறான செயற்பாடுகள் மற்றும் எதிர்மறையான அறிக்கைகளை இந்திய கால்பந்தாட்ச் சம்மேளனம் புறுக்கணித்தது. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இந்திய அணியின் தயார்படுத்தல்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.

வீரர்களை இணைத்தல் மற்றும் அணித் தெரிவுகளுக்கு அவர் சோதிடர் ஒருவரில் தங்கியிருந்தார் என்பதை அறிந்து சம்மேளனத்தின் புதிய தலைமைத்துவம் அதிர்ச்சியடைந்ததுடன், அதை நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது' எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தெரிவுக்கு சோதிடரை ஸ்டிமாக் நம்பியுள்ளார் என கடந்த வருடம் வெளியான செய்திகளை அவர் மறுத்திருந்தார்.

குரோஷிய தேசிய அணிக்காக 53 போட்டிகளில் விளையாடியவர் இகோர் ஸ்டிமாக். 1996 யூரோ கிண்ணத் தொடர் மற்றும் 1998 உலகக் கிண்ணத் தொடர் ஆகியனவும் இவற்றில் அடங்கும். 1998 உலகக் கிண்ணத்தில் குரோஷியா 3 ஆவது இடம் பெற்றமை குறி;ப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் வெஸ்ட்ஹாம், டேர்பி கவுன்ரி உட்பட பல கழகங்களுக்காகவும் அவர் விளையாடினார்.

குரோஷிய தேசிய  அணியின் பயிற்றுநராகவும் பணியாற்றிய அவர் 2019 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார். அவரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 53 போட்டிகளில் பங்குபற்றியது. அவற்றில் 19 போட்டிகளில் இந்தியா வென்றதுடன் 20 போட்டிகளில் தோல்வியுற்றது. 14 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55