(என்.வீ.ஏ.)
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஓர் அங்கமான கால்பந்தாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமானது.
இரு பாலாருக்கும் நடைபெறுகின்ற நொக் அவுட் கால்பந்தாட்டப் போட்டியில் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 18 அணிகள் பங்குபற்றுவதுடன் போட்டிகள் துரையப்பா விளையாட்டரங்கிலும் அரியாலை கால்பந்தாட்டப் பயிற்சியக அரங்கிலும் நடைபெற்று வருகின்றன.
ஆண்கள் பிரிவில் நடப்பு சம்பியன் வட மாகாணத்துக்கும் மேல் மாகாணத்துக்கும் இடையில் கடைசி வரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் வட மாகாணம் 4 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
அப்போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டிருந்தன.
வட மாகாணம் சார்பாக முன்னாள் தேசிய வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் 2 கோல்களையும் போட்டார். மேல் மாகாணம் சார்பாக சலன சமீர, எம்.சர்பான் ஆகியோர் கோல்களை போட்டனர்.
கிழக்கு மாகாணத்துக்கு எதிரான போட்டியில் தென் மாகாணம் 7 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஊவா மாகாணத்துக்கும் சப்ரகமுவ மாகாணத்துக்கும் இடையிலான போட்டி முழு நேரத்தின்போது 1 - 1 என வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி அணியை தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டி முறையில் ஊவா மாகாணம் 5 - 4 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றி பெற்றது.
வியாழக்கிழமை காலை போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் காலை 8.00 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒலிம்பியன், அண்மையில் காலமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நினைவுகூரப்பட்டார்.
இரு பிரிவினருக்குமான தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிகள் துரையப்பா விளையாட்டரங்கில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும்.
யாழ்ப்பாணத்தில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கால்பந்தாட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM