தாய், மகளை கத்தியால் குத்திவிட்டு 'ஹபாயா“ அணிந்து பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்றவர் கைது

27 Jun, 2024 | 03:26 PM
image

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் தாய் மற்றும் மகளை கத்தியால் தாக்கிவிட்டு, பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்ற நபரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.

மூதூரை பிறப்பிடமாகவும் ஈச்ச நகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வரும் 38 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார். 

தாக்குதலில் படுகாயமடைந்த தாய் (வயது 54) மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும் மகள் (வயது 31) கந்தளாய் தள வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 

கத்திக்குத்துக்குள்ளான தாயிடம் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் கடனுக்கு பணம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கொடுத்த பணத்தை மீளப் பெறுவதற்காக தாக்குதல் தாரியின் கையடக்க தொலைபேசி திருத்தும் கடைக்கு கத்திக்குள்ளான தாய் சென்று கேட்டுள்ளார்.

அதன் பின்னரே சந்தேக நபர் அத்தாயின் வீட்டுக்குச் சென்று கத்திக் குத்து தாக்குதலை நடத்தியுள்ளார். 

தாக்கிய நபர், அங்கிருந்த தப்பிச் செல்வதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே செல்ல முயற்சித்த வேளையிலேயே, சம்பவ இடத்துக்கு விரைந்த தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது...

2026-02-12 13:19:01
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-12 12:46:27
news-image

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2026-02-12 12:38:44
news-image

கொழும்பில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்ததில்...

2026-02-12 12:36:46
news-image

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு...

2026-02-12 12:26:50
news-image

அல்லைப்பிட்டி சம்பவம் ; உயிரிழந்த சிறுவன்...

2026-02-12 12:06:36
news-image

பாகிஸ்தான் மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழு...

2026-02-12 11:07:08
news-image

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 17 உணவகங்கள்...

2026-02-12 11:06:43
news-image

முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை எதிர்த்த அரசாங்கம் இப்போது...

2026-02-12 11:35:44
news-image

கேரள முதல்வரை சந்தித்தார் ஜேவிபி பொதுச்...

2026-02-12 11:23:53
news-image

கனடாவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: விஜித...

2026-02-12 11:07:27
news-image

காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற...

2026-02-12 10:38:23