விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய பிறப்புறுப்பொன்றை ஆய்வுகூடத்தில் விருத்தி செய்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகனின் ஆதரவில் வட கரோலினாவிலுள்ள மீள் விருத்தி மருத்துவத்துக்கான வேக் பொரஸ்ட் நிறுவகத்தால் இந்த ஆய்வுகூடத்தலான பிறப்புறுப்பு விருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிறப்புறுப்பு விருத்தி தொழில்நுட்பமானது ஈராக் போரில் காயமடைந்து இனவிருத்தி ஆற்றலை இழந்த நூற்றுக்கணக்கான அமெரிக்க படைவீர்களுக்கு தமக்கென எதிர்கால சந்ததியை விருத்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த ஆய்வுகூட பிறப்புறுப்பு விருத்தி தொழில்நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதெனவும் அதனை நடைமுறையில் பயன்படுத்துவதற்கு சில காலம் செல்லலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.