ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) பதுளை, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட சிறு தோட்ட காய்கறி விவசாயிகளின் பண்ணைகளை நவீனமயமாக்கியதுடன் சிறந்த விவசாய நடைமுறைகளை (GAP) அறிமுகப்படுத்தியது.
விவசாயத்தில் நவீன, காலநிலை-எதிர்ப்பு அணுகுமுறைகளை திறம்பட பின்பற்றுவதற்கு தேவையான கருவிகள் மற்றும் அறிவுடன் இலக்கு வைக்கப்பட்ட விவசாயிகளை சித்தப்படுத்துவதில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.
GAPஇனை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தி, பங்கேற்பாளர்களுக்கு 0.25 ஏக்கர் நிலப்பரப்புக்கு ஏற்றவாறு விவசாயப் கருவிகள் வழங்கப்பட்டன.
இந்த கருவிகள் சொட்டு நீர்பாசன முறைகள், பிளாஸ்டிக் தழைக்கூளம், பூச்சி-தடுப்பு வலைகள் மற்றும் கல்வனேற்றப்பட்ட இரும்பு (GI) குழாய்கள் போன்ற அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கியது. இவை திறமையான வளப் பயன்பாடு மற்றும் செலவு குறைப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
மேலும், FAOஆனது GAP சான்றிதழைப் பெறுவதற்குத் தேவையான நிபுணத்துவத்துடன் விவசாயிகளை மேம்படுத்தி விவசாயிகள் களப் பாடசாலைகள் (FFS) மூலம் திறன் கட்டியெழுப்புதலை எளிதாக்கியது. விரிவாக்க அணுகுமுறைகளை பயன்படுத்துவதன் மூலமும் வெற்றிகரமான GAP பண்ணைகளுக்கான வெளிப்பாட்டு விஜயங்களை மேற்கொண்டதன் மூலமும் பங்கேற்பாளர்கள் நவீன விவசாய முறைகள் பற்றிய விரிவான புரிதலைப் பெற்றனர்.
மேலும், சிறு விவசாயிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் (WFP) மூலம் பண உதவி கிடைத்தது. இது நிலைமாற்றக் கட்டத்தில் அவர்களின் உணவு மற்றும் போசாக்குத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
இந்த முன்னெடுப்பின் உறுதியான முடிவுகள் அதன் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பங்கேற்பாளர்களில் 71%க்கும் அதிகமான விவசாயிகள் பயிர் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயன பயன்பாடு குறைப்பு ஆகியவற்றை புகாரளித்துள்ளனர்.
மேலும், பூச்சி-தடுப்பு வலைகளை செயற்படுத்துவதால் பூச்சி தாக்குதல்கள் மற்றும் நோய்கள் குறைவதோடு, குரங்குகள், மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தை குறைத்து, அதன் மூலம் பயிர் தாங்கும் தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.
72% விவசாயிகள் அவர்களது மொத்த வருமானம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், ஓர் அறுவடைப் பருவத்தில் 24க்கும் அதிகமான விவசாயிகள் ரூபா. 1,000,000ஐ விட அதிகமான இலாபத்தையும்; 150க்கும் அதிகமான விவசாயிகள் ரூபாய் 500,000ஐ விட அதிகமான இலாபத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த புள்ளிவிபரங்கள் திட்டத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த முன்னெடுப்பானது 0.25 ஏக்கர் நிலத்துக்கு இரசாயன உரங்களின் சராசரி உபயோகத்தில் 48% குறைப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நன்மைகளையும் அளித்துள்ளது.
இந்த தலையீடு ஐக்கிய நாடுகளின் இலங்கை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட கூட்டு உணவு பாதுகாப்பு முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும். தேசிய முன்னுரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்புடன் (2023-2027) இணைந்த புத்தாக்கம் மிகுந்த, வினையூக்க மற்றும் நிலைமாற்ற முன்னெடுப்புக்களை இந்த நிதியம் ஊக்குவிக்கிறது.
இது அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியம் (Peace Building Fund) மற்றும் கூட்டு SDG நிதியத்தால் ஆதரிக்கப்படுகிறது.
மூன்று மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் விருது வழங்கும் விழா அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதித் தலைவர் லலிதா கபூர், மாகாண விவசாயச் செயலாளர் உபாலி ஜயசேகர மற்றும் FAG உதவிப் பிரதிநிதி (நிகழ்ச்சி) நலின் முனசிங்க ஆகியோரின் தலைமையில் தனமல்விலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு முன்மாதிரியான சாதனைகளை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், சந்தை தேவையை அதிகரிப்பதிலும் நிலைபேறான விவசாய நடைமுறைகளை வளர்ப்பதிலும் GAP சான்றுப்படுத்தலின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டியது.
முன்னோக்கிப் பார்க்கையில், இலங்கை உணவு விவசாய அமைப்பு (FAO Sri Lanka) இலங்கையில் ஒரு நெகிழ்திறன் மிக்க மற்றும் வளமான விவசாயத்துறைக்கு வழிவகுத்து, விவசாய நவீனமயமாக்கலை வளர்ப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதித் தலைவர் லலிதா கபூர், மாகாண விவசாயச் செயலாளர் உபாலி ஜெயசேகர மற்றும் FAG உதவிப் பிரதிநிதி (நிகழ்ச்சி) நலின் முனசிங்க ஆகியோர் தனமல்விலையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் GAPஐ வெற்றிகரமாக பின்பற்றியமைக்காக அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகின்றனர்.
FAG பற்றி...
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAG) பசியைத் தோற்கடிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வழிநடத்துகிறது. இது நாடுகளுக்கு விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி நடைமுறைகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் அவற்றை மிகவும் நிலைபேறானதாக ஆக்குவதுடன் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்கிறது. FAG உலகின் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் பசியுள்ள மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM