நாட்டில் ஓட்டுவதற்கு அனுமதியளிக்கப்படாத 36 இலட்சம் ரூபா பெறுமதியான 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நீர் கெழும்பு ஆண்டி அம்பலம பிரதேசத்தில் வீட்டென்றில் இருந்த குறித்த 3 மோட்டார் சைக்கிள்கள் நீர்கொழும்பு பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சட்டம் அமலாக்கப் பிரிவிற்கு கிடைக்கப்பட்ட தகவலிற்கு அமைய கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த 3 மோட்டார் சைக்கிள்கள் உடன் 26 வயதுடைய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மோட்டார் சைக்கிள்களிற்கு வரி செலுத்தாமல் பல காலமாக பாகங்கள் ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 36 இலட்சம் பெறுமதியுடையை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் கட்டுநாயக்க பொலிஸ் ஊடாக மினுவங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது