ரி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதல் தடவையாக தென் ஆபிரிக்கா

27 Jun, 2024 | 09:16 AM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றீட்டிய  தென் ஆபிரிக்கா 17 வருட ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் உலகக் கிண்ண அரை இறுதிகளில் 7 தடவைகள் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா தன்னைப் பின்தொடர்ந்து வந்த  துரதிர்ஷ்டத்தை எட்டாவது முயற்சியில் எய்டன் மார்க்ராம் தலைமையில் துடைத்தெறிந்தது.

தென் ஆபிரிக்கவின் வெற்றியில் பந்துவீச்சாளர்களின் சிறந்த பங்களிப்பும் ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் ஆகியோர் துடுப்பாட்டத்தில் காட்டிய பொறுப்புணர்வும் முக்கிய பங்காற்றின.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு11.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றது.

ரி20 உலகக் கிண்ண அரை இறுதி உட்பட சர்வதேச ரி20 இறுதிச் சுற்று வரலாற்றில் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் எவருமே தென் ஆபிரிக்கர்களின் பந்துவீச்சுக்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 13 உதிரிகளே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. துடுப்பாட்ட வீரர்களில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (10) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அன்ரிச் நோக்கியா 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரக்கா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

முதலாவது ஓவரில் குவின்டன் டி கொக் (5) ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்கா அதிர்ச்சிக் குள்ளானது.  

மொத்த எண்ணிக்கை 6 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது ஓவரில் நவீன் உல் ஹக் வீசிய பந்து தென் ஆபிரிக்க அணித் தலைவர் எய்டன் மார்க்ராமின் துடுப்பை உராய்ந்தவாறு விக்கெட் காப்பாளர் குர்பாஸின் கைகளில் தஞ்சம் புகுந்தது. ஆனால், குர்பாஸ் உட்பட யாருமே எவ்வித ஓசையையும் கேட்டதாக தெரியவில்லை. அதேவேளை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு கோரவும் இல்லை.

ஆனால், சலன அசைவுகளில் பந்து துடுப்பை உராய்ந்து செல்வது அல்ட்ரா எஜ்ஜில் நன்கு தெரிந்தது.

இதன் காரணமாக அதிர்ஷ்டம் ஏய்டன் மாக்ராம் பக்கமும் தென் ஆபிரிக்கா பக்கமும் திரும்பியது எனலாம்.

முதல் நான்கு ஓவர்கள் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய ரீஸா ஹென்றிக்ஸும் ஏய்டன் மார்க்ராமும் அதன் பின்னர் ஓட்ட வேகத்தை சிறுக சிறுக அதிகரிக்கச் செய்தனர்.

ஒன்பதாவது ஓவரில் 17 ஓட்டங்கள் குவிக்கப்பட தென் ஆபிரிக்கா வெற்றியை உறுதி செய்து ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டியில் புதிய அணியாக விளையாட தகுதிபெற்றது.

ரீஸா ஹெண்ட்றிக்ஸ் 29 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க்ராம் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தி தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 17ஆக உயர்த்திக்கொண்டார்.

ஆட்டநாயகன்: மாக்கோ ஜென்சன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய குத்துச்சண்டை அரை இறுதிகளில் மிஹிரான்,...

2025-05-16 18:37:59
news-image

லொஸ் ஏஞ்சலிஸ் 2028க்கு நியாயமானதும் வெளிப்படையானதுமான...

2025-05-16 15:14:09
news-image

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இங்கிலாந்தின் பட்லருக்கு...

2025-05-16 15:05:11
news-image

ஸ்ரீ லயன்ஸ் சர்வதேச வலைபந்தாட்ட லீக்...

2025-05-16 02:10:06
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-05-16 02:01:26
news-image

ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-05-16 01:58:43
news-image

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரர்...

2025-05-15 18:59:49
news-image

ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப்...

2025-05-15 16:14:14
news-image

ஆசிய 22இன் கீழ் மற்றும் இளையோர்...

2025-05-14 19:16:13
news-image

ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா; 12...

2025-05-14 14:49:52
news-image

தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப்...

2025-05-14 13:40:17
news-image

இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரி பழைய...

2025-05-14 12:21:00