(நெவில் அன்தனி)
17 வருட ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறப்போகும் புதிய அணி எது என்பதைத் தீர்மானிக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (27) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, இருவகை உலகக் கிண்ண அரை இறுதிகளில் 7 தடவைகள் தோல்வி அடைந்ததன் காரணமாக துரதிர்ஷ்ட அணி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள தென் ஆபிரிக்காவுக்கு எட்டாவது தடவையாக அதிர்ஷ்டம் கிட்டுமா? அல்லது முதல் தடவையாக அரை இறுதியில் விளையாடும் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்குமா? என்பதற்கான விடை வியாழக்கிழமை (27) கிடைக்கவுள்ளது.
ரி20 உலகக் கிண்ண அரை இறுதியை நோக்கிய ஆப்கானிஸ்தானின் பயணம் தடுமாற்றத்துக்கு மத்தியிலும் அற்புதமாக இருந்தது எனக் கூறலாம்.
கடந்த சில வருடங்களாக ரி20 கிரிக்கெட்டில் வெகுவாக முன்னேறிவந்துள்ள ஆப்கானிஸ்தான் இம்முறை தரவரிசையில் உயரிய நிலையில் இருந்த நியூஸிலாந்தையும் அவுஸ்திரேலியாவையும் வெற்றிகொண்டே அரை இறுதிக்கு முன்னேறியது.
அதேபோன்று அரை இறுதியில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தி மற்றொரு அதிசயத்தை ஆப்கானிஸ்தான் நிகழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மறுபக்கத்தில் டி குழுவிலும் சுப்பர் 8 சுற்றிலும் சகல போட்டிகளிலும் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, இறுதிச் சுற்றில் தொடரும் துரதிர்ஷ்டத்தை எய்டன் மார்க்ராம் தலைமையில் துடைத்தெறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது ஆப்கானிஸ்தானை விட தென் ஆபிரிக்கா சற்று பலம் வாய்ந்த அணியாகக் காணப்படுகிறது.
எனினும் தென் ஆபிரிக்காவுக்கு குழுநிலைப் போட்டிகளில் நெதர்லாந்து, பங்களாதேஷ், நேபாளம் ஆகியனவும் சுப்பர் 8 சுற்றில் இணை வரவேற்பு நாடான ஐக்கிய அமெரிக்காவும் பலத்த சவால் விடுத்திருந்ததை மறக்கலாகாது.
அதிரடி வீரர்கள் நிறைந்த தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டம் 7ஆம் இலக்கம் வரை நீண்டுக்கொண்டு போவதுடன் பந்துவீச்சிலும் பலம் மிக்கதாகவே தென் ஆபிரிக்கா காணப்படுகிறது.
துடுப்பாட்டத்தில் குவின்டன் டி கொக் (199 ஓட்டங்கள்), டேவிட் மில்லர் (144), ஹென்ரிச் க்ளாசன் (138), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (134) ஆகியோரும் பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா (11 விக்கெட்கள்), கெகிசோ ரபாடா (10), கேஷவ் மஹாராஜ் (9), தப்ரெய்ஸ் ஷம்சி (8), ஒட்நீல் பார்ட்மன் (8) ஆகியோரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களே முதுகெலும்பாக இருக்கின்றனர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் (281 ஓட்டங்கள் - சுற்றுப் போட்டியில் இப்போதைக்கு அதிக ஓட்டங்கள்), இப்ராஹிம் சத்ரான் (229) ஆகிய இருவரும் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய நான்கு சந்தர்ப்பங்களில் 50 மேற்பட்ட ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்துள்ளனர்.
உகண்டா (154), அவுஸ்திரேலியா (118), நியூஸிலாந்து (103) ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்து தமது அணியின் வெற்றிக்கு அடிகோலி இருந்தனர்.
ஆனால் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 3 சந்தர்ப்பங்களில் இருவரும் கோட்டைவிட்டனர்.
பப்புவா நியூ கினிக்கு எதிராக 8 ஓட்டங்களையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பூஜ்ஜியத்தையும் இந்தியாவுக்கு எதிராக 13 ஓட்டங்களையும் ஆரம்ப விக்கெட்டில் பெற்றனர்.
எனவே அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி ஆப்கானிஸ்தானை நெருக்கடிக்குள் ஆழ்த்த முயற்சிக்கும். ஆகையால் இந்தப் போட்டியில் நாணய சுழற்சி பிரதான பங்காற்றுவது உறுதி.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
பஸால்ஹக் பாறூக்கி (16 விக்கெட்கள் - சுற்றுப் போட்டியில் இப்போதைக்கு அதிக விக்கெட்கள்), அணித் தலைவர் ரஷித் கான் (14), நவீன் உல் ஹக் (13), குல்பாதின் நயிப் (7) ஆகியோர் பந்துவீச்சில் அசத்தியுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் ரி20 கிரிக்கெட்டில் 2 தடவைகளே ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அந்த இரண்டும் ரி20 உலகக் கிண்ண அரங்கில் இடம்பெற்றதுடன் அவற்றில் தென் ஆபிரிக்காவே வெற்றி பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் அரை இறுதிப் போட்டியில் எந்த அணி ஒரு சொட்டும் பிசகாமல் சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி ஆக்ரோஷத்துடன் விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றிகிட்டும்.
அணிகள்
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், குல்பாதின் நயிப், மொஹமத் நபி, கரிம் ஜனத் அல்லது மொஹமத் இஷாக், ரஷித் கான் (தலைவர்), நங்கேயாலியா கரோட், நவன் உல் ஹக், நூர் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி.
தென் ஆபிரிக்கா: குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), டேவிட் மில்லர், ஹென்றிச் க்ளாசன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா, அன்றிச் நோக்கியா, தப்ரெய்ஸ் ஷம்சி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM