சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி அணிகளைத் தீர்மானிப்பதற்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ராங்க் டக்வேர்த்தின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014வரை புள்ளியியல் ஆலோசகராக பணியாற்றிய டக்வேர்த் தனது 84ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார்.
டக்வேர்த்தின் சேவையை பாராட்டிய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், அன்னாரது மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில்
'பிராங்க் புள்ளியியல் நிபுணராக தனது கடமையை சிறப்பாக ஆற்றினார். அவரை அவரது சகாக்களும் கிரிக்கெட் குடும்பத்தினரும் மதித்தனர். அவர் இணைந்து உருவாக்கிய டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) முறைமை காலத்தின் தேவையாக இருந்தது. மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அதனை சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.
'கிரிக்கெட் விளையாட்டில் ப்ராங்க் டக்வேர்த்தின் பங்களிப்பு அளப்பரியது. அவரது மறைவால் கிரிக்கெட் உலகம் கவலை அடைகிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.
டக்வேர்த் லூயிஸ் முறைமையை டக்வேர்துடன் இணைந்து உருவாக்கிய மற்றையவர் டோனி லூயிஸ் ஆவார்.
பிரித்தானியாவின் பிரபுக்களில் ஒருவராக 2011இல் டக்வேர்துக்கு பதக்கம் சூட்டப்பட்டது. -- (என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM