எம்மில் சிலர் நாளாந்தம் பயணம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கியும் பராமரித்தும் வருவர். வேறு சிலர் இடமாற்றம் செய்தோ அல்லது புலம்பெயர்ந்தோ தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வார்கள். இவர்களுக்கெல்லாம் அவர்களின் ஜாதகத்தில் சந்திர பகவான் வலிமையாக இருந்து அருள் பாலிக்கிறார் என உணர்ந்துகொள்ளலாம்.
மேலும், இவர்களுக்கு நாளாந்தம் பசியாற்றும் உணவு என்பது சரியான தருணத்தில் தரமானதாக கிடைக்கும்.
சிலருக்கு பசியாற்றும் உணவின் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டாலோ அல்லது அதன் காரணமாகவே சளி தொந்தரவு ஏற்பட்டாலோ அவர்களுக்கு சனி பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கவில்லை என பொருள் கொள்ளலாம்.
மேலும், சந்திர பகவானின் அருள் இருந்தால் அல்லது உங்களது ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் உணவு சார்ந்த தொழிலையும், நீர் சார்ந்த தொழிலையும் மேற்கொண்டு அதனை லாபகரமாக இயக்கி வருவீர். அதே தருணத்தில் சந்திர பகவான் உங்களது ஜாதகத்தில் வலிமையாக இருந்தால், நீங்கள் பாவிக்கும் வாகனத்தில் எந்தவொரு தொல்லையும் ஏற்படாது. அதே தருணத்தில் வாகனத்தில் அல்லது வாகனத்தை இயக்கும்போது ஏதேனும் தொல்லை ஏற்பட்டு, விபத்து நிகழ்ந்தால் சந்திர பகவானின் அருள் பரிபூரணமாக இல்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு மட்டும் தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அது தேய் பிறை சந்திரன் மற்றும் வளர் பிறைச் சந்திரன் என சந்திர பகவானை இரண்டாக பிரிக்கலாம்.
தேய்பிறை சந்திரன் பாவியாகவும், வளர்பிறை சந்திரன் சுபராகவும் அருள் பாலிப்பார். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் தேய்பிறையில் அமர்ந்து பொருத்தமற்ற இடத்தில் வீற்றிருந்தால் அவர்களுக்கும், அவருடைய தாயாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். அவர்கள் பிரிந்தும் வாழ நேரிடும். அதே தருணத்தில் சந்திர பகவான் யோகத்தையும் அருள்வார். உடனே எம்மில் சிலர் யாருக்கு அருள்வார் என ஆர்வமுடன் கேட்பர்.
உங்களது ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனாக இருந்து, சந்திரன் நின்ற வீட்டிலிருந்து ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சுப கிரகங்களான குரு பகவான்-புதன் பகவான்,-சுக்கிர பகவான் - ஆகியோர் இருந்தால் உங்களுக்கு சந்திர பகவான் அதிகமான யோகங்களை அள்ளி அள்ளித் தருவார். இவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மரியாதை கிடைக்கும். அரசாங்கங்களிலும் இவர்களுக்கென பிரத்யேக செல்வாக்கினை உருவாக்குவர்.
பொதுவாகவே சந்திர பகவான் நின்ற வீட்டிலிருந்து ஆறு, ஏழு, எட்டு ஆகிய வீடுகளில் சுப கிரகங்கள் இருந்தால், சந்திர யோகம் உண்டு. தேய்பிறையாக இருந்தால் குறைவாகவும், வளர்பிறையாக இருந்தால் எதிர்பார்ப்பை விட கூடுதலாகவும் யோகத்தை அருள்வார்.
நீங்களும் உங்களது ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் என்ன ராசி? என்பதனை தெரிந்துகொண்டு, அந்த ராசியின் வீட்டிலிருந்து ஆறாம் வீடு, ஏழாம் வீடு, -எட்டாம் வீடு ஆகிய வீடுகளில் ஏதேனும் சுப கிரகங்கள் (குரு, சுக்கிரன், புதன் ஆகியவை) இடம்பிடித்திருக்கிறதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
இடம் பிடித்திருக்கிறது என்றால், அவை குருவாக இருந்தால், குரு திசையிலும், சுக்கிரனாக இருந்தால் சுக்கிர திசையிலும், புதனாக இருந்தால் புதன் திசையிலும், உங்களுக்கான சந்திர யோகம் என்பது கூடுதலாக கிடைத்து, உங்களது செல்வ நிலை உயர்வதுடன்... சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் மேலோங்கும்.
அதேவேளை இந்த காலகட்டத்தில் சந்திராஷ்டமம் எனும் நாட்கள் வரும் தருணத்தில் அதற்குரிய பிரத்யேக மந்திரத்தை உச்சரித்து சந்திர பகவானை வணங்கி வந்தால் அவர் கொடுக்கும் யோகத்தில் எந்த தடையும் இருக்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM