குமட்டல் உணர்வு, வாந்திக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

26 Jun, 2024 | 05:45 PM
image

ம்மில் சிலர் விருந்துகளிலோ அல்லது சுப நிகழ்வுகளிலோ பங்குபற்றும்போது அங்கு பசியாறும் உணவின் காரணமாக அல்லது அந்த உணவில் நஞ்சு கலந்திருப்பதன் காரணமாக அல்லது அந்த உணவின் ஒவ்வாமை காரணமாக குமட்டல் உணர்வோ அல்லது வாந்தி பாதிப்போ ஏற்படக்கூடும். எம்மில் பலரும் இத்தகைய குமட்டல் அல்லது வாந்தி பாதிப்பை எதிர்கொண்டு இருந்தாலும்.. அதற்குரிய முக்கியத்துவம் தராமலும், போதிய அளவிற்கு சிகிச்சை எடுக்காமலும் கடந்துவிடுவர். ஆனால் வாந்தியும், குமட்டலும் ஒரு சில நோய் பாதிப்பின் அறிகுறிகள் என்பதால்... குறிப்பாக ஒற்றைத் தலைவலி மற்றும் மூளை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால்... இந்த பாதிப்பு ஏற்பட்ட பிறகு அல்லது இந்த பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எம்முடைய செரிமான மண்டலத்தின் சீரற்ற இயக்கம், நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றின் காரணமாகவும் குமட்டலும், வாந்தியும் ஏற்படக்கூடும்.  வாந்தி என்பது வாய் வழியாக வயிற்றில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் ஏனையவை வெளியே வருவதாகும். குமட்டல் என்பது வாந்தி எனும் நிலைக்கு முன்னர் ஏற்படும் ஒருவித விரும்பத்தகாத அசௌகரியமான உணர்வாகும். இவை தீவிர நிலை இல்லை என்றாலும்.. இதனை அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்.

நாடி துடிப்பில் சீரற்ற தன்மை, உலர் வாய், மயக்கம், தலைசுற்றல், வயிற்றுப் பகுதியில் வலி, மனக்குழப்பம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் குமட்டலும், வாந்தியும் ஏற்படக்கூடும்.

விரும்பாத பயணம், பித்தப்பை வீக்கம், ஒற்றை தலைவலி, தலைசுற்றல், வயிற்றுப் புண்கள், அதீத அமிலத்தன்மை, மூளை பகுதியில் ஏற்படும் காயம், மூளை புற்றுநோய், பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்கள், அச்சம், விரும்பத்தகாத மணம், உணவின் ஒவ்வாமை, நஞ்சாக மாற்றம் பெற்ற உணவு, புற்றுநோய்க்காக வழங்கப்படும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு தெரபி ஆகிய பல காரணங்களால் எமக்கு குமட்டலும் வாந்தியும் ஏற்படக்கூடும்.‌

இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு எதன் காரணத்தினால் வாந்தி ஏற்படுகிறது என்பதனை பிரத்யேக ஆய்வுகள் மற்றும் ரத்த பரிசோதனை ஆகியவற்றின் மூலம் துல்லியமாக அவதானித்து வகை படுத்துவர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். சிலருக்கு இதன் போது வாழ்க்கை நடைமுறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சில பரிந்துரைகளை வைத்தியர்கள் வழங்குவர்.‌

- வைத்தியர் ஸ்ரீ தேவி

தொகுப்பு : அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10