பதுளையிலிருந்து  கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் தடம் புரண்டமையினால் மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் பாதிப்பேற்பட்டுள்ளது.

வட்டவளை ரயில் நிலையப் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் ரயில் தடம் புரண்டுள்ளது. 

ரயிலில் பயணித்த பயணிகளை ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டிவரை இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் ஏற்றிச்சென்று, நாவலப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து மற்றுமொறு ரயிலில் பயணங்களை மேற்கொள்ள ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.