(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜூலை முதலாம் திகதியில் இருந்து காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (ஈ பாஸ்போட்) இலத்திரனியல் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.
ஏதாவது வெளிநாட்டு பயணச்சீட்டு ஒன்று செல்லுபடியாகும் 10 வருட கால எல்லையை தாண்டிய பின்னர் அதற்கு மேலும் ஒரு வருட காலம் வழங்குவது இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகிக்கும் வரை மாத்திரமாகும் எனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்படுவதுடன் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
இதேவேளை, தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் போன, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு மேலும் சந்தர்ப்பம் இருப்பதாக ஆட்பதிவு பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
பிறப்பத்தாட்சிப்பத்திரம் ஒன்று இல்லாமை காரணமாக வேறு அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இநத மாதம் 30ஆம் திகதிவரை இந்த சந்தர்ப்பம் இருப்பதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதன்திரி தெரிவித்துள்ளார். இதற்காக விண்ணப்பிப்பதற்கு கடந்த மார்ச் 31ஆம் திகதிவரை காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றாரலும் விண்ணப்பிக்கும் காலத்தை நீடித்து வழங்குமாறு பிரதேச செயலாளர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு, இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM