"INGENUITY" தேசிய விருது விழாவில் UpBright Edutech நிறுவனம் தேசிய மற்றும் மாகாண விருதுகளை வென்று வாகை சூடியது

26 Jun, 2024 | 01:08 PM
image

ருடந்தோறும் மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் (Sri Lanka Association for Software Services Companies) தேசிய ரீதியில் நடைபெறும் SLASSCOM INGENUITY விருது வழங்கல் விழாவில் UpBright Edutech நிறுவனமானது Best Innovative Product / Project in E-commerce & Retails பிரிவில் Ub-course Learning Management systemதை அறிமுகம் செய்து இரண்டு விருதுகளை வென்றது. 

மாகாண ரீதியாக இப்பிரிவில் முதலாவது இடத்துக்கான விருதையும், தேசிய விருது பிரிவில் பல முன்னணி மென்பொருள் நிறுவனங்களை வென்று தேசிய விருதையும் பெற்று, கிழக்கு மாகாணத்துக்கு மகுடத்தை ஈட்டித் தந்தமை குறிப்பிடத்தக்கது.

SLASSCOM Ingenuity Awards 2024 விழாவானது கொழும்பு சங்க்ரில்லா ஹோட்டலில் புதன்கிழமை (19) நடைபெற்றது. 

இந்த விழாவில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், இலங்கையில் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் 10 பிரிவுகளுக்கான தேசிய மற்றும் மாகாண விருது பிரிவுகளில் போட்டியிட்டமை குறிப்பிட்டத்தக்கது. 

நாடளாவிய ரீதியில் பெயர் நாமம் பூத்த பல நிறுவனங்கள் மத்தியில் போட்டியிட்டு, தேசிய மற்றும் மாகாண ரீதியில் முதல் தடவையாக இரண்டு விருதுகளை வென்றமை UPBRIGHT Edutech நிறுவனத்தின் நான்கு வருட கால முயற்சியில் உன்னத வெளிப்பாடாகும். 

UpBright Edutech நிறுவனம் இளம் தொழில் முயற்சியாளர்களான MFM.அஸ்பர் மற்றும் ZAM.அஸாம் ஆகிய இருவரின் கனவின் வெளிப்பாடாக உதித்து சுமார் 3500 மாணவர்களுடன் வெற்றிப்பாதையில் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்விருதினை பெறுவதற்காக N.J.செரோன் அனாஸ் தலைமையிலான UPBRIGHT Edutech அணியினர்களான N.M.நிப்லால், M.பவிட்சன், M.N.M.ஆஷிப், A.S.இம்தாத் மஹ்தி, S.கிஷாந்துஜன், I.J.அஹமத் மற்றும் ஏனைய குழுவினர்களின் அயராத உழைப்பினை நன்றியுடன் நினைவுகூர வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பரப்புதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் போன்ற செயற்றிட்டங்களின் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பினை செய்துவரும் மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு புத்தாக்க சிந்தனையாளர்களுக்காக ஆறாவது தடவையாக இவ்வருடமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07