இரு கால்களுடன் ஊனமான நிலையில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் செயல் பிரதேச மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கம்பஹா, கலவானை பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

மிகவும் கஷ்டமான நிலையில் பிச்சையெடுத்து கொண்டிருந்த நபர் ஒருவர் தனது இறுதி பஸ்ஸில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் தினமும் காலை முதல் மாலை வரை நகரத்திற்கு வரும் மக்களிடையே தமக்கு இரு கால்கள் இயலாமையினால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் தனது வயிற்று பசிக்காக தான் பிச்சையெடுப்பதாகவும் தெரிவித்து பஸ்களில் கஷ்டப்பட்டு ஏறி பிச்சையெடுத்து வந்துள்ளார்.

இவரின் மீது இரக்கம் கொண்ட மக்கள் அவருக்கு உணவு மற்றும் பணமும் வழங்கி வந்துள்ளனர். இந்த நடவடிக்கை தினசரி நடைப்பெற்று வந்துள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள தினத்தில் இந்நபர் செல்லும் கடைசி பஸ் செல்வதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. குறித்த நபர் மலசலக் கூடத்திற்கு சென்று தனது உடையினை மாற்றிவிட்டு வருவதற்கு முன் அவர் செல்லவேண்டிய பஸ் புறப்பட்டுச் சென்றுள்ளது.

அருகாமையில் இருந்த முச்சக்கரவண்டியின் ஏறியில் குறித்த பஸ்ஸினை பிடிக்க விரட்டிச் சென்று பஸ்ஸின் பின்புறமாக நிறுத்தி முச்சக்கரவண்டியிற்கு பணம் செலுத்தும் வேளையில் பஸ் புறப்படுவதை கண்ட குறித்த நபர், ஊன்றுகோல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஓடிச்சென்று ஏறியுள்ளார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.