போர்த்­துக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ 19 மில்­லியன் யூரோ விலையில் குட்டி விமானம் ஒன்றை வாங்­கி­யுள்ளார்.

உலகின் பணக்­கார கால்­பந்து வீர­ராக கரு­தப்­படும் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, தற்­போது ரியல்­மாட்ரிட் அணிக்­காக விளை­யாடி வரு­கிறார். இந்த பரு­வக்­காலம் முடிந்­த­வுடன் இவர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜேர்­மயின் அணியில் இணை­ய­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் அவர் 'கல்ப்ஸ்ட்ரீம் ஜி 200' ரக, 8 முதல் 10 பேர் செல்லக் கூடிய விமானம் ஒன்றை 19 மில்­லியன் யூரோ கொடுத்து வாங்­கி­யுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. உல­கத்­தி­லேயே கால்­பந்து விளை­யாட்டு மூலம் அதிகம் சம்­பா­திக்கும் வீரர்கள் வரி­சையில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.