இலங்கை கடற்படையினரால் புத்தளம் கடற்பரப்பில் வைத்து 200 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள பல நாள் மீன்பிடி படகின் உரிமையாளரான “ ஜேகோப் புத்தா ” என்பவர் மாலைதீவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
இவர் மாலைதீவுக்கு செல்வதற்கு தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போதே விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு, ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் படகு, இலங்கை கடற்படையினரால் இன்று (26) காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM