இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆனது, நிதியமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மொரட்டுவை பல்கலைக்கழகம், இலங்கையின் தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் காணப்படும் வரிவிதிப்பு மற்றும் நிதிக் கொள்கைகள் தொடர்பில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, தேசிய வரி தொடர்பான கலந்ரையாடலுக்கான முதலாவது கூட்டத்தை நடாத்தியது.
இந்த ஆரம்ப நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கைக்கான UNDP இன் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களை வெளிக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த தேசிய கலந்துரையாடல் அமைந்திருந்தது. வரியின் நோக்கம், சமூக அல்லது நிதி தொடர்பான ஒப்பந்தம், வரி விதிப்பில் நேர்மைத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வருமானம் தொடர்பில் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியன தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் UNDP இணைந்து முதன் முறை முன்னெடுத்த இலங்கையில் ‘வரி செலுத்துவோரின் எண்ணம் தொடர்பான ஆய்வு’ இல் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது. வரிச்சுமை, வரித் தவிர்ப்பு, நிறுவனங்களின் மீதான நம்பிக்கை, நிறுவன சீரமைப்பின் பின்னணி, குறிப்பாகப் பொருத்தமான வருமான நிறுவனங்களுடனான அனுபவங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த, தேசிய ரீதியான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பொதுவான கருத்துகளை இந்த ஆய்வு வெளிக் கொண்டு வந்தது.
இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கையின் UNDP வதிவிடப் பிரதிநிதி, Azusa Kubota, “இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDG) அடைவதற்கான வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு ஒரு வரலாற்று ரீதியான வாய்ப்பை வழங்குகிறது.
திட்டமிடல், வரவு செலவுத் திட்டம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை, குடிமக்களின் ஈடுபாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை இது உள்ளடக்கியுள்ளது. எனவே, தேசிய வரி தொடர்பான கலந்துரையாடலானது, சமூகம் முழுவதும் புரிந்துணர்வையும், பயனுள்ள SDG இனை அடைவதற்கான வரி உறுதியை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பையும் மேம்படுத்துவதற்கான சரியான நேரத்தில் அமைந்த நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த கலந்துரையாடலானது, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. குறிப்பாக 2023 பெப்ரவரியில் ஐநா பொதுச்செயலாளர் ‘SDG Push’ (நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி செலுத்துதல்) இற்கு அழைப்பு விடுத்தார். இது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு கட்டுப்படியான வகையில், நீண்ட கால நிதியாக வருடாந்தம் 500 பில்லியன் டொலர் முதலீட்டை நோக்கியதாகும்” என்றார்.
பரஸ்பர ஒத்துழைப்பையும் வரிக் கட்டமைப்பில் ஈடுபாட்டையும் ஊக்குவிப்பதானது, நிலைபேறான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கும், சமூக முன்னேற்றத்தில் பங்காளிகளாகப் பங்குபற்றுவதற்கு குடிமக்களை ஊக்குவிப்பதன் மூலமும் மேலும் உள்ளீர்க்கப்பட்டதும் வளமான எதிர்காலத்தை மேம்படுத்துவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பை இது கோடிட்டுக் காட்டுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM