'போத்தல் ராதா' மூலம் மது பிரியர்களுக்கு பா. ரஞ்சித் வழங்கும் அறிவுரை

25 Jun, 2024 | 08:33 PM
image

தனித்துவமான நடிப்பு திறமை கொண்ட நடிகர் குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பாட்டல் ராதா' ( போத்தல் ராதா)  எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் :பாட்டல் ராதா' ( போத்தல் ராதா)  எனும் திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜோன் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. என். அருண் பாலாஜி தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் வழங்குகிறார்.‌

படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மது போத்தல் ஒன்றில் கதையின் நாயகனான குரு சோமசுந்தரம் அமர்ந்து மது அருந்துவதை போலவும், அதற்கு கீழே அவருடைய வாழ்வாதாரம் தொடர்பான கருவிகள் இடம் பிடித்திருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

இதனிடையே இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மலையாள திரையுலகை சார்ந்த முன்னணி நட்சத்திர நடிகர் டொவினோ தாமஸ் - இயக்குநர் பசில் ஜோசப்- நடிகைகள் பார்வதி திருவோத்தூ- நிமிஷா சஜயன்- ஸ்வேதா மேனன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என்ற அறிவிப்பு வெளியானது என்பதும், ஆனால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகும் இவர்களுடைய சமூக வலைதளத்தில் 'பாட்டல் ராதா' தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30