லுணுகலை சோலன்ஸ் தோட்டத்தில் நபர் ஒருவர் தேயிலை கொழுந்து சேகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (24) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
சோலன்ஸ் தோட்டம் சுவீன்டன் பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று மதியம் வீட்டை விட்டுச் சென்றதாகவும், பின்னர் வீடு திரும்பாததையடுத்து பொலிஸார் விசாரணை நடத்திய போது, கொழுந்து சேகரிக்கும் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM