நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்வுகளை நடத்திய சியபத பினான்ஸ் !

25 Jun, 2024 | 02:49 PM
image

சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமுமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடளாவிய ரீதியில் உள்ள கிளை வலையமைப்பின் ஊடாக, சுமுகமான வாடிக்கையாளர் சேவையை வழங்கி இலங்கையர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. அதன் நிலையான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 'சியபதயிலிருந்து பூமிக்கு' என்ற நிகழ்ச்சியின் ஊடாக, ஒரே நாளில், வழிபாட்டுத்தலங்கள், சுற்றுப்புறச்சூழல்கள், மற்றும் நெரிசலான பொது இடங்கள் உட்பட 37 இடங்கள் சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

2024 ஜூன் 05 அன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சியபத பினான்ஸ் பிஎல்சி கிட்டத்தட்ட 2 டன் மக்காத குப்பைகளைச் சேகரித்து, சுத்தம் செய்வதற்கும் மீள்சுழற்சி செய்வதற்கும் அனுப்பியது. சகல சியபத பினான்ஸ் ஊழியர்களும் குழுவாக இணைந்து  தலைமைத்துவத் திறனுடன், நாடு தழுவிய ரீதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு, தமது நிறுவனத்தின் சேவைப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றினர். அதே வேளையில் சமூகத்திற்காக தமது கடமைகளை செய்வதில் அவர்கள் தமது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தமை தெளிவாக வெளிப்பட்டது. இந்த நாடு தழுவிய துப்புரவுப் பணிகளுக்கு மேலதிகமாக, சியபத பினான்ஸ் பிஎல்சியின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், சிவனொலிபாதமலையைச் சுற்றியுள்ள பகுதியில் சூழலை தூய்மைப்படுத்தும் திட்டத்தையும் சமீபத்தில் செயல்படுத்தினர்.

சியபத பினான்ஸ் பிஎல்சி தம்புள்ளை கிளை சிகிரியா தொல்பொருள் வலையத்தையும், அவிசாவளை கிளையானது போபத் வாவிப் பகுதியையும், அனுராதபுரக் கிளையானது மிஹிந்தலை ரஜமஹா விகாரையையும், நுகேகொட கிளை கல்கிஸ்ஸ கடற்கரைச் சூழலையும், மஹரகம கிளையானது துன்மோதர ரன்முதுஎல்ல சுற்றுச்சூழல் பகுதியையும், காலி கிளை காலி கோட்டைப் பகுதியையும், மாத்தறைக் கிளை நில்வலா கங்கை இணையும் மாத்தறை கடற்கரை பிரதேசத்தையும், வவுனியாக் கிளை வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து வெளிவட்ட வீதி வழியாக புதிய பேருந்து நிலையப் பகுதி வரையும், இரத்தினபுரி கிளை இரத்தினபுரி மகா சமன் தேவாலயப் பகுதியையும், அக்கரைப்பற்றுக் கிளை சின்ன முகத்துவாரம் தம்பட்டை கடற்கரைப் பிரதேசத்தையும், மாலபே கிளை மற்றும் பிட்டகொட்டுவ கிளைகள் இணைந்து பெத்தகான தெத்மினி பூங்காவையும், பதுளை கிளை முத்தியங்கன ரஜமஹா விகாரையையும், புத்தளம் கிளை புத்தளம் களப்பையும், சாய்ந்தமருது கிளை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதியையும், நுவரெலியா கிளை கிரகரி வாவிப் பகுதியையும், நிட்டம்புவ கிளை வாரண ரஜ மகா விகாரையையும், குருநாகல் பிரதான அலுவலகம் மற்றும் மெட்ரோ கிளை என்பன இணைந்து படகமுவ வனப் பாதுகாப்பு வீதியைச் சுற்றியுள்ள பகுதியையும், அம்பாறை கிளை அம்பாறை பேருந்து நிலையம் மற்றும் சிறுவர் பூங்காவைiயும், கேகாலைக் கிளை மீப்பிட்டிய புராண தம்பிட்ட மகா விகாரையையும், ஹட்டன் கிளை கொட்டகலை கொமர்ஸல் ஏரியையும், நீர்கொழும்பு கிளை நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியையும், கல்முனைக் கிளை விடுதியைச் சுற்றிய கடற்கரை பிரதேசத்தையும், மட்டக்களப்பு கிளை கல்லடி கடற்கரைப் பகுதியையும், நவம் மாவத்தை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ஆகிய கிளைகள் ஒன்றிணைந்து வெள்ளவத்தை கடற்கரைப் பிரதேசத்தையும், பொலன்னறுவை கிளை பராக்கிரம சமுத்திரத்தையும், அம்பிலிபிட்டிய கிளை சந்திரிகா வாவியையும், கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை கிளைகள் இணைந்து அம்புலுவாவ சூழல் வலையத்தையும், சிலாபம் கிளை சிலாபம் கடற்கரையையும், தெதுரு ஓயா பகுதியையும், கம்பஹா மற்றும் வத்தளைக் கிளைகள் இணைந்து ராகம தேவத்தை பசிலிக்கா தேவாலய வளாகத்தையும், கொஹூவளை மற்றும் பிலியந்தலை கிளைகள் பொரலஸ்கமுவ பில்லுவ விகாரைப் பகுதியையும், பேலியகொட மற்றும் கிரிபத்கொட கிளைகள் உஸ்வட்டகெய்யாவ கடற்கரைப் பகுதியையும், யாழ்ப்பாணக் கிளை யாழ் நகரம், பொது நூலகம் மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளையும், பாணந்துறை, களுத்துறை மற்றும் மொரட்டுவ கிளைகள் இணைந்து களுத்துறை கெலிடோ கடற்கரைப் பகுதியையும், குளியாபிட்டிய கிளை பண்டுவஸ்நுவர தொல்பொருள் வளாகத்தையும், திருகோணமலை கிளை திருகோணமலை பொது கடற்கரையையும், கிளிநொச்சி கிளை கிளிநொச்சி ஏரியையும், மாத்தளை கிளை மாத்தளை அலுவிகாரையை சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்தன.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன, நாடளாவிய ரீதியிலான இந்த சுற்றாடல் சுத்திகரிப்பு சமூகப் பராமரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், 'சியபத பினான்ஸின் கூட்டாண்மை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கிடையில் ''சியபதயிலிருந்து பூமிக்கு'' என்ற திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம். வணிக ரீதியில் செயல்பட்டு தங்களைப் பற்றி மட்டுமே சுயநலமாகச் சிந்திப்பவர்கள், சுற்றுச்சூழலின் மதிப்பைப் புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் குப்பைகளை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவது தொடர்கிறது. சுற்றுச்சூழலும் நாமும் இரு பிரிவினர் அல்ல, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று பின்னிப் பிணைந்துள்ளோம், சுற்றுச்சூழல் இல்லாமல் மனிதன் இருக்க முடியாது என்பதை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இலங்கை நிறுவனம் என்ற வகையில், துப்புரவுப் பணிகளுக்கு மட்டுமின்றி, ஒழுங்கற்ற முறையில் கழிவுகளை அகற்றுவது தவறானது, அதனை செய்யக்கூடாது என்று இலங்கையர்களை உறுதிபூண வைக்க எதிர்காலத்தில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நம்புகிறோம்.' எனக் கூறினார்.

சம்பத் வங்கி குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 19 வருடங்களாக புதுமையான நிதிச் சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்ற இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமாகும். இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் போன்ற பலருக்கு வலுவூட்டி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 75ஆவது ஆண்டு...

2026-01-23 15:54:46
news-image

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகப்...

2026-01-24 10:57:45
news-image

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின்...

2026-01-21 16:29:06
news-image

ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு

2026-01-21 13:09:40
news-image

iKING ஆண்கள் ஆடை நிறுவனத்தின் அறிமுக...

2026-01-20 17:58:51
news-image

கலாமித்ரா விருது விழாவில் தமிழகப் பிரமுகர்கள்

2026-01-20 16:55:58
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2026-01-20 14:13:25
news-image

வவுனியா பதிப்பகத்தாருடன் இணையும் இலங்கை பதிப்பக...

2026-01-20 11:37:23
news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25