ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் இலங்கையின் தேஹாஸ் வெள்ளி வென்றார்

25 Jun, 2024 | 01:28 PM
image

(நெவில் அன்தனி)

கஸகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த நுட்பத்திறன்களைப் பயன்படுத்தி விளையாடிய  இலங்கையின் தேஹாஸ் ரித்மித்த 2ஆவது இடத்தைப் பெற்று வரலாறு படைத்தார். நிரல்படுத்தலுக்கான தொடக்க வரிசையில் 32ஆவது இடத்தில் இருந்த தேஹாஸ், தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் வெற்றிபெற்று 9 மொத்த புள்ளிகளில் 7 புள்ளிகளைப் பெற்று வெற்றியாளர் மேடையில் இடம்பிடித்தார்.

முதல் நிலை வீரரான கஸக்ஸ்தானின் அலிம்ஸான் சாயின்பே என்ற வீரர் உட்பட இரண்டு ஆட்டங்களில் மட்டுமே தேஹாஹ் ரித்மித்த தோல்வி அடைந்தார்.

6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்தவாறு கடைசிச் சுற்றுக்குள் பிரவேசித்த தேஹாஸ், மங்கோலியாவைச் சேர்ந்த டர்பட் டோட்முங்கை தீர்மானம் மிக்க போட்டியில் எதிர்கொண்டார். மிகவும் கடுமையான அப் போட்டியில் தேஹாஸ் வெற்றியீட்டினார்.

இரண்டாவது இடத்தில் இருந்த வீரரிடம் தோல்வியுற்ற தெஹாஸ் புள்ளிகளின் அடிப்படையில் சம்பியன் நூரலி போலாஷாகோவுக்கு (கஸக்ஸ்தான்) அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். மொங்கோலிய வீரர் சோட்பிலெக் ஆனந்த் 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கிரேக்கத்தின் ரோட்ஸ் நகரில் 2023இல் நடைபெற்ற உலக பாடசாலைகள் செஸ் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் சுவீகரித்த தேஹாஸ் ரித்மித்த வென்றெடுத்த இரண்டாவது சர்வதேச பதக்கம் இதுவாகும்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயிலும் தேஹாஸ், ஆசிய இளைஞர் செஸ் சம்பியன்ஷிப்பில் பங்கேற்ற ஏனைய 18 வீரர்கள் மத்தியில் ஒரு சிறந்த செஸ் வீரராக பரிணமித்துள்ளார்.

அத்துடன் இலங்கை செஸ் மேடையில் புதிதாக மிளிர்ந்துவரும் இளந்தளிர்களில் தேஹாஸ் ஒருவராவார். தெஹாஸை விட இலங்கையிலிருந்து பங்குபற்றிய சிறுவர்களில் 41ஆவது தரவரிசையிலிருந்து ஆரம்பித்த என். தந்தெனிய 9 புள்ளிகளில் 6 புள்ளிகளைப் பெற்று 7ஆவது   இடத்தைப் பெற்றார்.

அத்துடன் 16 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் போட்டியிட்ட வினுக்க துஹெயன் விஜேரத்ன 6 புள்ளிகளுடன் 12 ஆவது   இடத்தைப் பெற்றார்.

8 வயது முதல் 18 வயது வரை 12 பிரிவுகளில் ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 33 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 643 வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியை முன்னின்று நடத்திய வரவேற்பு நாடான கஸக்ஸ்தான் 5 தங்கம் உட்பட 10 பதக்கங்களுடன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

சர்வதேச செஸ் சம்மேளன கொடியின் கீழ்  நடுநிலையாக   போட்டியிட்ட அணியினர் 4 தங்கப் பதக்கங்களையும் இந்தியா, ஈரான், வியட்நாம் ஆகியன தலா ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.

கடைசியாக ஜூன் 20ஆம் திகதி நடைபெற்ற ஆசிய யூத் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தெஹாஸ் 6 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தைப் பெற்றார்.

10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான பிளிட்ஸ் செஸ் போட்டியில் வானீஷா ஓஷினி கோம்ஸ் 7 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தைப் பெற்றார்.

பெண்களுக்கான பிளிட்ஸ் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் கஜகஸ்தான் சாம்பியன் ஆனது.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான பிளிட்ஸ் போட்டியில் தஹம்தி சந்துல 9ஆம் இடத்தைப் பெற்றார்.

இந்தப் போட்டியில் இளம் வீரர்கள் வெளிப்படுத்திய நுட்பத்திறனுடனான சிறப்பான ஆட்டங்கள் செஸ் அரங்கில் இலங்கைக்கு ஒரு பொற்காலத்தை நோக்கி நகர்வதை எடுத்துக்காட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41