மட்டக்குளி புனித மரியன்னை ஆலய பரிசுத்த வார வழிபாடுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி குருத்தோலை ஞாயிறு திருப்பலியுடன் ஆரம்பமாகின்றது.

குருத்தோலை ஞாயிறு  வழிபாடுகள் (09.04.2017)

காலை 6.30 மணிக்கு சிங்களமொழியில் திருப்பலி யும், காலை 8.00 மணிக்கு ஆங்கில மொழியில் திருப்பலியும், காலை 11.00 மணிக்கு தமிழ்மொழியில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.

சிலுவைப் பாதை

அன்றையதினம் காலை 6.30 மணித் திருப்பலியின் பின் சிங்கள மொழியில் திறந்த வெளி  சிலுவைப்பாதையும் காலை 8.00 மணித் திருப்பலியின் பின் ஆங்கில மொழியில் சிலுவைப்பாதையும் மாலை 4.00 மணிக்கு ஆலய வளாகத்தில் தமிழ்மொழியில் சிலுவைப் பாதையும் இடம்பெறும். 

இதன்பின்னர் மாலை 6.00 மணிக்கு சிங்கள மொழியில் திருப்பலி இடம்பெறும்.

திங்கட்கிழமை (10.04.2017 )

திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு தவக்காலத் தியானம் தமிழ்மொழியில் இடம்பெறும். 

புனித வியாழன் (13.04.2017)

புனித வியாழன் வழிபாடுகள் மாலை 4.30 மணிக்கு தமிழ்மொழி திருப்பலியுடன் ஆரம்பமாகி இடம்பெறும்.

அதேவேளை, மாலை 6.30 மணிக்கு சிங்கள மொழியில் திருப்பலியுடன் ஆரம்பமாகி புனித வியாழன் வழிபாடுகள் இடம்பெறும்.

திருமணி ஆராதனைகள்

திருமணி ஆராதனைகளை இரவு 8.00 மணி முதல்  9.00 மணிவரை மறைப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னெடுப்பர்.

இரவு 9.00  மணி முதல் 10.00 மணிவரை ஆங்கிலத்திலும் இரவு 10.00  மணி முதல்  11.00 மணி வரை தமிழ் மொழியிலும் இரவு 11.00 மணி முதல்  12.00 மணி வரை சிங்கள மொழியிலும் திருமணி ஆராதனைகள் இடம்பெறும்.

புனித வெள்ளி (14.04.2017)

புனித வெள்ளியன்று காலை 6.30 மணிக்கு ஆலய வளாகத்தில் சிங்கள மொழியில் சிலுவைப்பாதை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ஆலயவளாகத்தில்  தமிழ் மொழியில் சிலுவைப்பாதை இடம்பெறும்.

புனித வெள்ளி மாலை வழிபாடுகள்யாவும் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெறும்.

புனித சனி  (15.04.2017)

புனித சனி வழிபாடுகள் இரவு 9.00 மணிக்கு தமிழ் மொழியிலும் இரவு 11.30  சிங்களமொழியிலும் இடம்பெறும்.

உயிர்ப்பு ஞாயிறு (16.04.2017)

உயிர்ப்பு ஞாயிறன்று காலை 6.30 மணிக்கு தமிழ்மொழியில் திருப்பலியும் காலை 8.00 மணிக்கு ஆங்கில மொழியில் திருப்பலியும் காலை 9.30 மணிக்கு சிங்கள மொழியில்  திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.