ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது -  சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல் 

Published By: Vishnu

25 Jun, 2024 | 04:15 AM
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை (25) அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டம் திங்கட்கிழமை (25) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று பொது வேட்பாளர் தொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் எமக்குள் இடம்பெற்று இருந்தது. இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம்  திங்கட்கிழமை (25) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை முன்னெடுத்துச் செல்வது என்றும் ஒரு இறுக்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழர் தரப்பில் உள்ள சிவில் அமைப்புகளுடன் பேசி  ஏனையவர்களையும் இணைத்து இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தமிழ் மக்களினுடைய உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலையை அடையக்கூடிய வகையில் இந்த தேர்தல் களத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்பதை தீர்மானமாக எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இன்றைய உயர் பீட சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜனா கருணாகரன், ஈ பி ஆர் எல் எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் மற்றும் துளசி, புளொட் சார்பில் முன்னாள் விவசாய அமைச்சர்  சிவனேசன், ஜனநாயக தமிழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் இந்திரலிங்கம்  மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28