மக்கள் இறப்பை தவிர்க்க  புரட்சிகரமான சவாலை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார் - அமைச்சர் மனுஷ நாணயக்கார

Published By: Vishnu

25 Jun, 2024 | 03:54 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மக்கள் இறக்கும் போது நாட்டை விட்டுக்கொடுக்கும் எவரும் உண்மையான புரட்சியாளர்கள் அல்ல. நாடு வீழ்ச்சியடையும் போது மக்கள் இறப்பதைத் தடுக்கும் புரட்சிகரமான சவாலை ஏற்றுக்கொண்டவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவாகும் என  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ‘ஸ்மார்ட் யூத் கிளப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இளைஞர்களின் இலக்குகள் தவறான திசையில் திசைதிருப்பப்பட்டன. இதனால் நாடு வீழ்ச்சியடைந்ததுடன், இளைஞர்கள் தமது ஆற்றலைச் சரியான திசையில் செலுத்தவில்லை.  

சேகுவேரா ஒரு புரட்சியாளர். அதனால்தான் அவரைப் படித்து நம்பும் இளம் தலைமுறையினர் இருக்கிறார்கள். ஒரு புரட்சியாளர்க்கு இருக்க வேண்டிய சிறந்த குணம் அன்பு என சேகுவேரா ஓர் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்'  எனவே  ஒரு உண்மையான புரட்சியாளர் அன்பின் உயர்ந்த உணர்வுகளால் வழிநடத்தப்படுகிறார்.

நம் நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்தது,  மக்கள் வரிசையில் நின்று இறந்தனர். மக்கள் இறப்பதைத் தடுத்த நாம், நம்மை உண்மையான புரட்சியாளர்கள் என்று அழைக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்த சவாலை ஏற்றுக்கொண்டது.

மக்களின் வேதனைகளையும், துயரங்களையும் கண்டு அவர் சவால்களை ஏற்றுக்கொண்டார். உண்மையான புரட்சியாளர்கள் சவால்களை ஏற்று மக்களுக்காக நின்றார்கள். மக்களை நேசிக்காதவர்கள், மக்கள் இறப்பதைப் பார்த்தவர்கள், மக்கள் இறந்தால் நாட்டைக் காப்போம், நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று சொன்னவர்கள் உண்மையில் புரட்சியாளர்களா? 

2015 ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது.,அவரை பலரும் எதிர்த்தனர்.நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவே அவர் அந்த தீர்மானத்தை மேற்கொண்டார் அவர் அன்று அதனை செய்திருக்காவிட்டால், இன்று நாங்கள் இப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது.

இந்த நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் சிவப்பு சகோதரர்கள் முன்னோக்கி செல்ல விடாமல் இருந்தவர்கள். தற்போது எலோன் மஸ்க்கை ஒரு பொருளாதார கொலையாளி என்று அழைக்கிறார்கள். இன்று, நாம் வரலாற்றிலிருந்து எதிர்காலத்திற்கு வந்துள்ளோம், எலோன் மஸ்க் போன்று  இளைஞர்களை திறமைமிக்கவர்களாக சிறந்த தலைவர்களாக வலுப்படுத்த கிராமத்திலிருந்து தொழில்முறை பயிற்சிகளை வழங்குகிறோம். இந்த பொருளாதாரக் கொலைகாரர்கள் கூறுவது போல் நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அல்ல என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39