(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சீரழிப்பவர்களின் சதித்திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவேன். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டியில் திங்கட்கிழமை (25) சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1994ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியமைக்கும் தரப்பு வெற்றிப் பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற 6 தேர்தல்களிலும் கதிரை, வெற்றிலை, அன்னம் மற்றும் மொட்டு சின்னங்களில் சுதந்திர கட்சி போட்டியிட்டுள்ளது. அதே போன்று இம்முறை தேர்தலில் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்துவோம்.
கட்சி யாப்பிற்கமைய நானே தலைவர். எனினும் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமையால் தற்காலிகமாக நான் அந்த பதவியில் செயற்படவில்லை. வரும் தினங்களில் நீதிமன்றத்தினால் பொருத்தமான தீர்ப்பு வழங்கப்படும். எமது அரசியலமைப்பிற்கேற்ப தகுதியான எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். அதுவே ஜனநாயகமாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சீரழிப்பவர்களின் சதித்திட்டங்களை விரைவில் அம்பலப்படுத்துவேன். அதற்கான நேரம் இதுவல்ல. பொறுத்தமான நேரத்தில் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவேன். நான் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றி பெறுவேன். எமது வெற்றியின் பின்னர் எனக்கெதிரான அனைத்து வழக்குகளும் அரசியலமைப்பிற்கமைய செயலிழக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM