இந்திய கரையோர பாதுகாப்பு கப்பலான ''ஷோர்" கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியக் கரையோர பாதுகாப்பு கப்பலான “ஷோர்“ எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.


கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் இரு நாட்டு கரையோர பாதுகாப்பு, கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.