பவதாரணியின் 'சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ...!'

24 Jun, 2024 | 06:26 PM
image

எம் மண்ணில் உயிர் நீத்த 'இசைஞானி' இளையராஜாவின் வாரிசான பவதாரணியின் மயக்கும் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்  மூலமாக மீண்டும் உருவாக்கி இருக்கும் 'சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..'  எனத் தொடங்கும் விஜயின் 'கோட்- GOAT'  பட பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் நடிப்பில் தயாராகும் ' கோட்- GOAT' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியரும், கவிஞரும், எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா - மறைந்த பின்னணி பாடகி பவதாரணி- நடிகரும், பாடகருமான விஜய் - ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மெல்லிசையுடன் உருவாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கோட்- GOAT' எனும் படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம்+ கல்பாத்தி எஸ். கணேஷ்+ கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..' எனும் பாடல்... நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று மாலை வெளியிடப்பட்டது. விஜயின் காந்த குரல்-  மறைந்த பவதாரணியின் மயக்கம் குரல் - யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் மெல்லிசை.. ஆகிய காரணங்களால் இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச விருதை வென்ற 'பராரி '

2024-07-22 16:59:14
news-image

அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' அப்டேட்

2024-07-22 17:01:29
news-image

'வீராயி மக்கள்' படத்தின் இசை வெளியீடு

2024-07-22 17:10:14
news-image

இளசுகளின் ஓயாத உச்சரிப்பில் இடம் பிடித்த...

2024-07-22 17:12:12
news-image

'நாற்பது வயது குழந்தை நகுல்' -...

2024-07-22 15:37:05
news-image

கீர்த்தி சுரேஷ் கர்ஜிக்கும் 'இந்தி தெரியாது...

2024-07-22 15:08:43
news-image

நடுக்கடலில் தவிக்கும் 'போட்டில் தேவாவின் 'தகிட...

2024-07-21 15:11:17
news-image

சீயான் விக்ரமின் 'தங்கலான்' வெளியீட்டு திகதி...

2024-07-21 15:02:41
news-image

விக்ரமுடன் மோதும் பிரசாந்த்

2024-07-21 14:43:28
news-image

அஜித் குமாரின் 'விடா முயற்சி' அப்டேட்

2024-07-21 11:01:33
news-image

இசைப்புயல்' ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட...

2024-07-21 11:01:51
news-image

பாடகர் அறிவு எழுதி, பாடி, இசையமைத்திருக்கும்...

2024-07-19 17:36:22