முச்சக்கரவண்டி - உழவு இயந்திரம் மோதி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு ; மூவர் காயம்

24 Jun, 2024 | 08:45 PM
image

மாத்தளை பிரதேசத்தில் வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதுன்கமுவ -ஹெட்டிப்பொல வீதியில் நாமினி ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

வில்கமுவையிலிருந்து ஹதுன்கமுவ நோக்கிப் பயணித்த முச்சக்ரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும்,  உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ள நிலையில் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் தெவகிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் வில்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வில்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02
news-image

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி - இரண்டு...

2024-07-14 09:36:19
news-image

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் 

2024-07-14 09:22:44
news-image

தமிழ்த் தேசியப் பேரவையின் உடன்பாடு 17இல்...

2024-07-14 09:29:39
news-image

ஜனாதிபதி தேர்தல் 2024 : செவ்வாய்க்கிழமை...

2024-07-14 10:10:40