வெல்லவாயவில் சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் இரண்டாவது மக்கள் பேரணி

24 Jun, 2024 | 06:44 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான புதிய கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் பொதுக்கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகர மையத்தில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "நாட்டிற்கு வெற்றி - ஒன்றிணைந்து பயணிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவினால் வெல்லவாய மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, “புதிய கூட்டணிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியின் வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான எம்.பி.க்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணி தலைமையிலான ஏனைய கட்சிகள், பாரிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு சிவில் அமைப்புக்கள் இப்புதிய கூட்டணியை நோக்கி அணி திரளத் தயாராகி வருகின்றனர்.” என்றார்.

இந்த மக்கள் பேரணி நிகழ்வில், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சுசில் பிரேமஜயந்த, நளின் பெனாண்டோ, அநுர பிரியதர்ஷன யாபா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட புதிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரமங்கள் இருந்த போதிலும் 16,000 ஆசிரியர்களை...

2024-07-22 23:34:52
news-image

இலங்கையில் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை பலிகொள்ளக்கூடிய...

2024-07-22 22:32:21
news-image

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்...

2024-07-22 17:16:25
news-image

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா...

2024-07-22 22:02:03
news-image

இந்து சமுத்திரத்தின் சுதந்திரம் மற்றும் பிராந்திய...

2024-07-22 21:54:12
news-image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய...

2024-07-22 21:31:10
news-image

22 ஆவது திருத்தம் ஜனாதிபதி தேர்தல்...

2024-07-22 17:15:15
news-image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 455 697...

2024-07-22 19:25:35
news-image

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை...

2024-07-22 17:18:35
news-image

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு...

2024-07-22 19:10:14
news-image

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு...

2024-07-22 18:38:46
news-image

சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி மீது...

2024-07-22 17:23:24